???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உலகக் கோப்பை கால்பந்து: கோஸ்டோரிகாவை பந்தாடியது பிரேசில் 0 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி செல்லமேஸ்வரர் ஓய்வு பெற்றார்! 0 பாஜகவின் பிரதிநிதியாக ஆளுநர் செயல்படுகிறார்: ஸ்டாலின் காட்டம்! 0 கேரளத்தை பிரதமர் தொடர்ந்து புறக்கணிக்கிறார்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு 0 தென் கொரிய முன்னாள் பிரதமர் கிம் ஜாங் பில் மறைவு 0 வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி: பாரதிராஜா மீது வழக்கு பதிவு 0 காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹுசைன் நியமனம்! 0 அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகளை அந்தந்த மாவட்டங்களிலேயே எழுதலாம்: பிரகாஷ் ஜவடேகர் 0 திமுகவினர் கைதை கண்டித்து போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் கைது! 0 2021க்கு முன்பு தேர்தல் சட்டமன்ற தேர்தல் வராது: ஜெயக்குமார் பேச்சு 0 டெல்லியில் கேரள முதல்வர் போராட்டம் 0 நாட்டிற்கு நல்லது நடப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை: தமிழிசை கருத்து 0 ஆளுநர் கார் மீது கருப்புக் கொடி வீசிய தி.மு.க.வினர் 192 பேர் கைது! 0 ‘சர்கார்’ படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணி எதிர்ப்பு 0 கடலுக்கு செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை வானிலை மையம் எச்சரிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எஸ்.ராவுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது!

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   01 , 2018  23:16:08 IST


Andhimazhai Image

 

வாழும் காலத்திலே எழுத்தாளர்களைக் கௌரவித்துக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பைந்தமிழ் மன்றம் என்ற அமைப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு ஆண்டிற்கு ஒரு இலக்கியவாதியைத் தேர்வு செய்து பொற்கிழியோடு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.

 

இந்த ஆண்டிற்கான இயற்றமிழ் வித்தகர் விருதிற்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைத்  தேர்வு செய்துள்ளதாக  வைகோ அறிவித்துள்ளார். விருது வழங்கும் விழா மார்ச் 16 வெள்ளிகிழமை மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார் வைகோ.

 

தமிழ் இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் பற்றும் அன்பும் கொண்டவர்  வைகோ.

கலிங்கத்துபரணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் என அவர்வி ரிவான இலக்கிய உரைகளை ஆற்றுவார். மடைதிறந்த வெள்ளம் போலக் கருத்துகளைப் பொழிவார்.

”வைகோ அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார்.

எனது புதிய நாவலோ, கட்டுரைகளோ வெளியாகும் தருணத்தில் அதைப்படித்துவிட்டுத் தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவிப்பது வழக்கம்.

எனது இந்தியா தொடராக வெளிவந்து கொண்டிருந்த போது வாரம் தோறும் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவார். தேர்தல் பணிகளுக்குள் இருந்த நாட்களில் கூட மறக்காமல் வாசித்துப் பேசியதை கண்டு வியந்திருக்கிறேன்.

எனது இந்தியா நூலிற்குத் தனியாக ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என விரும்பினார். அதற்கான முயற்சிகளும் கூட நடந்தன. ஒருங்கிணைப்பாளர் செய்த குழப்பத்தால் அது நடைறெவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் அழைத்து இப்படியொரு விருது வழங்கதிட்டமிட்டு இருப்பதாகச் சொன்னார்.

மூத்தபடைப்பாளிகள் பலரும் இருக்கிறார்கள். அவர்களை முதலில் கௌரவப்படுத்துங்கள் என்று சொன்னேன். நீங்கள் என் விருப்பத்திற்குரிய இலக்கியவாதி . ஆகவே முதலில் உங்களைக் கௌரவிக்க விரும்புகிறேன். ஆண்டுத் தோறும் நல்ல படைப்பாளிகள் நிச்சயம் கௌரவிக்கபடுவார்கள். அதன் முதல் அடையாளமாக இதை நினைக்கிறேன். என்று சொன்னார்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்று நன்றி தெரிவித்தேன், “ என்று கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

 

 

 

 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...