???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சாவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர்: அபிஷேக் சிங்வி புகழாரம்! 0 டெங்கு: உள்ளாட்சி, சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! 0 தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசுவது குற்றம் அல்ல: வைகோ 0 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி கூடுகிறது! 0 அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன: பிரகாஷ் காரத் 0 மஹாராஷ்டிரா, ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு! 0 தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை: குற்றச் சம்பவங்களில் தமிழகம் 6-வது இடம் 0 மும்மொழிக் கொள்கை மறைமுகமான சமஸ்கிருத திணிப்பு: ராமதாஸ் கண்டனம் 0 கனமழை: சேலம், ராமநாதபுரம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

லிங்குசாமிக்குக் கை கொடுப்பாரா கமல்?

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   03 , 2014  02:47:56 IST

 
    கலிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடிக்கும் உத்தமவில்லன் படத்தின் பெரும்பகுதிப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அந்தப்படத்தை முழுமையாக முடிப்பதை விட்டுவிட்டு கமல் த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்தில் நடிக்கப்போய்விட்டார். அதற்குக் காரணமாக அஞ்சான் படத்தின் காரணமாக திருப்பதிபிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டதாகவும் அதனால் உத்தமவில்லன் படத்தின் வேலைகள் தடைபட்டுவிட்டன என்று சொல்லப்பட்டது. ஆனால் உண்மை வேறாக இருக்கிறதென்று சொல்கிறார்கள். உத்தமவில்லன் படத்தை முதல்பிரதி அடிப்படையில் கமலே தயாரித்துத் தருவதெனவும் அதற்காக திருப்பதிபிரதர்ஸ் நிறுவனம் சுமார் நாற்பத்தைந்துகோடி ரூபாய் தருவதெனவும் பேசப்பட்டதாம். படப்பிடிப்பு தொடங்கிய பிறகு சிறிது சிறிதாக சுமார் நாற்பத்தியிரண்டு கோடி ரூபாயை வாங்கிவிட்டாராம் கமல். ஆனாலும் படத்தை முடித்துக்கொடுக்காமல் பாபநாசம் படத்தில் நடிக்கப் போய்விட்டார். இன்னொரு பக்கம் அவருடைய விஸ்வரூபம் பாகம்இரண்டின் வேலைகளும் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றனவாம். இம்மூன்று படங்களில் எது முதலில் வரவேண்டும் என்பதை கமல்தான் முடிவு செய்வார். முதலில் நம்முடைய படம் இருக்கவேண்டும் என்று திருப்பதிபிரதர்ஸ் கடவுளை வணங்கிக்கொண்டிருக்கிறார்களாம். அஞ்சான் காரணமாக கடும் நெருக்கடியில் இருக்கும் அவர்களை நெருக்கடியிலிருந்து இந்தப்படம்தான் மீட்கவேண்டும். ஆனால் கமல் இதுபற்றிக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார் என்றும் அவரிடம் எதுவும் பேசமுடியாது என்பதால் இவர்கள் தங்களுக்குள்ளாகவே வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று திரையுலகவட்டாரத்தில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.
    


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...