???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மோடி - ராகுல் : கட்டிப்பிடி வைத்தியம்! 0 நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இன்று மிக முக்கியமான நாள்: மோடி கருத்து! 0 லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்! 0 பொதுமக்களின் புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 சாதிக்கொடுமையால் இடமாற்றம் செய்யப்பட்ட சமையலர் மீண்டும் அதே பள்ளிக்கு மாற்றம்! 0 நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு இல்லை: எடப்பாடி பழனிசாமி 0 நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் 0 CBSE பள்ளிகளை தமிழக அரசு ஆய்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம் 0 பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுரை! 0 விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு 0 மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க ஆதரிக்காது: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 0 சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம் 0 ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீது புதிய குற்றப்பத்திரிக்கை தாக்கல் 0 பணி நியமனங்களை நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி உத்தரவு 0 புதுவை பட்ஜெட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை: சட்டசபை ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

எஸ்.ராவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!.

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   06 , 2018  01:33:16 IST


Andhimazhai Image
தமிழின் குறிப்பிடத் தகுந்த படைப்பாளிகளுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
கோவையில் கொடிசியா அமைப்பு சார்பில் நடைபெறும் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் ஒரு படைப்பாளிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கிறது. இந்த விருது ஒரு லட்ச ரூபாய் பணமும் பட்டயமும் கொண்டது. 2018ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் எஸ்.ராவுக்கு வழங்கப்பட உள்ளது. விருது வழங்கும் நிகழ்வு புத்தக கண்காட்சி நடைபெறும் கொடிசியா அரங்கில் ஜுலை 21ல் மாலையில் நடைபெறுகிறது. விருது விழாவையொட்டி எஸ்.ராமகிருஷ்ணன் படைப்புகள் குறித்த சிறப்பு கருத்தரங்கு ஒன்றும் நடைபெறவுள்ளது.
 
 
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு கிராமத்தில் 1966-ஆம் ஆண்டு பிறந்தார். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வரும் எஸ்.ரா இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார். 
 
 
அட்சரம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து எட்டு இதழ்கள் வரை வெளியிட்டிருக்கிறார். உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில், நிமித்தம், சஞ்சாரம், இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கியமான வரலாற்று நூல்களாகும். துணையெழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம், கேள்விக்குறி, சிறிது வெளிச்சம் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க அ-புனைவு நூல்கள் ஆகும். பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். திரையுலகில் ஆல்பம், உன்னாலே உன்னாலே, பாபா, சண்டைக்கோழி, ஏகன், மோதி விளையாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 
 
 
வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது, தாகூர் விருது, பெரியார் விருது, மாக்சிம் கார்க்கி விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
 
 
சமீபத்தில் இவர் தொடங்கிய தேசாந்திரி பதிப்பகம் மூலம் தனது நூல்களை வெளியிட்டு வரும் இவர் பிற படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...