செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
பங்கு விற்பனை தொடர்பாக செபியிடம் எல்ஐசி வரைவு ஆவணங்கள் தாக்கல்
பொதுப் பங்கு வெளியீட்டிற்காக(IPO) செபியிடம் எல்ஐசி நிறுவனம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்தது. இதையடுத்து மார்ச் மாதத்தில் எல்ஐசி…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
பங்கு விற்பனை தொடர்பாக செபியிடம் எல்ஐசி வரைவு ஆவணங்கள் தாக்கல்
Posted : செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 15 , 2022 06:50:00 IST
பொதுப் பங்கு வெளியீட்டிற்காக(IPO) செபியிடம் எல்ஐசி நிறுவனம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்தது. இதையடுத்து மார்ச் மாதத்தில் எல்ஐசி பங்குகள் விற்பனை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாக எல்ஐசி விளங்குகிறது. இதன் நிகர சொத்து மதிப்பு மட்டும் 5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. 1.2 கோடிக்கு மேலான முகவர்கள் மற்றும் 25 கோடிக்கும் மேலான பாலிசிகளை எல்.ஐ.சி. வைத்துள்ளது. 2000க்கும் மேற்பட்ட அலுவலகங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உலகிலேயே 3வது இடத்தில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் பொது பங்குகள் விரைவில் வெளியாகும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1ம் தேதி நடந்த பட்ஜெட் தாக்கலின் போது அறிவித்திருந்தார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில் கூட எல்ஐசி பங்கு விற்பனை விரைவில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன்படி, எல்ஐசி பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்து ரூ.78 ஆயிரம் கோடி நிதி திட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பொது பங்கு வெளியீட்டிற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி தாக்கல் செய்துள்ளது. 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும் என தெரிகிறது. இதில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்படவுள்ளது.
|