???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நிலவேம்புக்கு கொரோனா எதிர்ப்புத்திறன் - சுவீடன் பல்கலை. கூட்டு ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு 0 கொரோனா பாதிப்பு காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆனது! 0 அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா தொற்று 0 நெருக்கமான பகுதியான தாராவி சாதித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு பாராட்டு 0 சாத்தாகுளம் சம்பவம் தொடர்பாக பாடகி சுசித்ராவின் வீடியோவை நம்ப வேண்டாம்: சிபிசிஐடி 0 கட்சியிலும், ஆட்சியிலும் சசிகலாவிற்கு ஒருபோதும் இடமில்லை: ஜெயக்குமார் 0 வகுப்பறை வாசனை-8- நான் இப்பொழுது பெரிய பள்ளிக்கூடத்தில்- ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 தமிழகத்தில் வெளிநாட்டு இஸ்லாமியருக்குக் கொடுமை! -கே.எஸ்.அழகிரி அறிக்கை 0 சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை 0 தமிழகத்தில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று 0 சித்த மருத்துவர்கள் மருந்து கண்டறிந்தால் அதனை சந்தேகிப்பது ஏன்? நீதிமன்றம் 0 சாத்தான்குளம் வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம் 0 சொத்து வரி வசூலை 6 மாதங்களுக்காவது தள்ளி வைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின் 0 கான்பூரில் ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்!

Posted : வியாழக்கிழமை,   மே   28 , 2020  02:31:40 IST


Andhimazhai Image

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நலம் பற்றி திடீரென உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகிறது. இதற்குக் காரணம், கடந்த திங்கள் கிழமை இரவு பிரபல வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிய மின்னஞ்சல் காரணமாக இருக்கலாமோ என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த மின்னஞ்சலில் டெல்லி, மும்பையைச் சேர்ந்த முக்கிய வழக்கறிஞர்கள் 20 பேர் கையெழுத்திட்டிருந்தனர். இதில் ப.சிதம்பரம், கபில் சிபல், பிரசாந்த பூஷன் போன்ற வழக்கறிஞர்களும் அடக்கம்.

 

இந்த கடிதத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை விளக்கப்பட்டிருந்தது. நாட்டில் சில நூறுபேருக்குத் தொற்று இருந்த காலத்தில் இருந்தே இவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மத்திய அரசு விரும்பவில்லை. இவர்களுக்கு உணவு முறையாகக் கிடைக்கவில்லை, குறுகிய இடத்தில் அடைக்கப்பட்டதால் நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ளது. நீதிமன்றம் இதில் தலையிடாமல் விட்டதன் காரணமாகவே இதெல்லாம் நேர்ந்துள்ளது என்கிற ரீதியில் அந்த கடிதம் இருந்தது.

 

அவர்கள் ஊருக்குப் போக ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் அந்தந்த மாநில எல்லையில் இறக்கி விடப்பட்டனர். அங்கிருந்து தங்கள் சொந்த ஊர் செல்ல அந்த மாநிலங்களும் ஏற்பாடு செய்யவில்லை. வாழ்வுரிமை, பயணம் மேற்கொள்ளும் உரிமை,  அவர்களின் சுதந்தரம் போன்றவை இந்த ஏழைகளுக்கு மறுக்கப்பட்டுள்ளன என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு, உச்சநீதிமன்றம் தலையிடத் தவறியது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

 

இந்த கடிதமே, உச்சநீதிமன்றம் உடனடியாக புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்னையை கையில் எடுக்கக் காரணமாக அமைந்ததாக நம்பப்படுகிறது.

 

தாமதமாக இருந்தாலும்கூட, பெருநகர்களில் தேங்கித்தவிக்கும் தொழிலாளர்களின் நிலைமைக்கு விடிவு பிறக்குமா?

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...