![]() |
சுப்ரமணியன் சுவாமி கருத்து - இலங்கைத் தலைவர் கிண்டல்Posted : திங்கட்கிழமை, ஜுலை 11 , 2022 17:46:48 IST
இலங்கையில் நிலவிவரும் அரசியல் கொந்தளிப்பான நிலைமையைக் கட்டுப்படுத்துவதிலும் இராஜபக்சேக்களுக்கு ஆதரவாகவும் இந்தியா தன் இராணுவத்தை அனுப்பவேண்டும் என சுப்ரமணியன் சுவாமி கூறியிருந்தார். இதை முன்னிட்டு இலங்கைக்கு இந்தியா மீண்டும் இராணுவத்தை அனுப்புமா எனும் கேள்வியும் எழுந்தது. ஆனால் இந்தியத் தரப்பில் அப்படியான தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இலங்கையிலும் சு.சுவாமியின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, சுவாமிக்கு கிண்டலாக பதிலளித்து தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். “ இராஜபக்சேக்களை மீட்பதற்கு இந்தியாவிலிருந்து வரவிருக்கும் குழுவை வரவேற்க இலங்கை மக்கள் காத்திருக்கிறார்கள். வருபவர்கள் இராஜபக்சேக்களை இந்தியாவுக்கு அழைத்துச்செல்வார்களேயானால் அதற்கான செலவை இலங்கை மக்கள் அளிப்பார்கள். ஆனால் அதன்பிறகு இந்தியாவின் நிதிநிலவரம் குறித்து நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.” என்று இரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Lanka MP reacted to Subramanian swamy 11-07-2022
|
|