???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கர்நாடக மாநில அமைச்சரவை இன்று விரிவாக்கம் 0 இட ஒதுக்கீட்டுக்கு முடிவுக்கட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் முயற்சி: காங்கிரஸ் குற்றச்சாட்டு 0 ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை: முதலமைச்சர் அறிவிப்பு 0 இந்தியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு பாகிஸ்தானுக்கு டிரம்ப் அறிவுறுத்தல் 0 காஷ்மீரில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: ஸ்டாலின் கண்டனம் 0 அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மோடி பேச்சு! 0 அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு 0 மத உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸ் சம்மன்! 0 திருச்சி விபத்தில் பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு 0 காவிரி டெல்டா விவசாயிகள் கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு 0 பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி நீதிமன்றம்: முதலமைச்சர் அறிவிப்பு 0 இனி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்துதான் பேச்சுவார்த்தை: ராஜ்நாத் சிங் 0 மிகவும் அரிதான நிகழ்வு: சென்னை, வடதமிழக கனமழை பற்றி ‘தமிழ்நாடு வெதர்மேன்’ 0 ஒடிசாவில் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை 0 வைகோ மருத்துவமனையில் திடீர் அனுமதி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கடும் எதிர்ப்பால் சனீஸ்வரனை தரிசிக்க முடியாமல் திரும்பிச் சென்ற சிங்கள எம்.பி.

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   21 , 2013  22:40:41 IST

தமிழக கட்சியினரின் கடும் எதிர்ப்பை அடுத்து, நாகை மாவட்டம் திருக்கடையூர் சனீஸ்வரனைத் தரிசிக்க முடியாமலேயே, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கருரத்ன ஜெயசூர்ய அவரது நாட்டுக்குத் திரும்பினார். 

 

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கருரத்ன, தன் மனைவி, உறவினர்களுடன் திருக்கடையூரில் தங்கியிருந்தார், அங்குள்ள அமிர்தகடேஸ்வரர் ஆலயத்துக்குச் செல்ல வியாழன் காலையில் தயாராக இருந்தார். ஆனால், அவரது வருகையைக் கண்டித்து, நகரில் உள்ள மதிமுக, பாமக, நாம் தமிழர், திமுக, விசிக, பாஜகவினர் அவர் தங்கியிருந்த விடுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் விடுதியை விட்டு வெளியே வரமுடியாத கருரத்னவை, போலீசார் திருச்சிக்கு அனுப்பிவைத்தனர். கட்சியினரின் கடும் எதிர்ப்பால், சிங்கள எம்பி வழிபாடு செய்யாமலேயே நாடு திரும்பவேண்டியதாயிற்று. 

 

திருச்சியில் அவர் தங்கியிருந்த எஸ்.ஆர்.எம். விடுதி முன்பும் நாம் தமிழர் கட்சியினர் உள்பட பலரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதற்கிடையில், திருக்கடையூரிலேயே பாஸ்போர்ட்டை வைத்துவிட்டு வந்ததால், மாலை 4 மணிக்கு கொழும்பு புற்பட்ட சிறீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் அவர் போக முடியவில்லை. இரவு 9 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானத்தில்தான் அவர் அனுப்பிவைக்கப்பட்டார். 

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...