Posted : வெள்ளிக்கிழமை, ஜுலை 15 , 2022 11:31:54 IST
ஐ.பி.எல் முன்னாள் தலைவர் லலித் மோடி , முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் டேடிங் செய்து வருதாக தெரிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் அமைப்பின் முன்னாள் தலைவராக பதவி வகித்தவர் லலித் மோடி. கிரிக்கெட் போட்டியை நடத்தியதில் பெருமளவு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. லண்டனில் பதுங்கி வாழும் லலித் மோடியை கைது செய்ய மத்திய அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் லலித் மோடி தனது சமூக வலைதளங்களில், சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. முதலில் திருமணம் செய்துள்ளதாக அறிவித்தார். பின்னர் சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இறுதியாக 'புதிய வாழ்க்கை தொடக்கம்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.