???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   17 , 2020  21:13:33 IST

சமூக நீதிக்காக போராடியவர் பெரியார். அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்று  பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
 
பிரதமர் நரேந்திரமோடி யின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்கும் வகையில் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டது. முன்னதாக சென்னை  பாண்டிபஜாரில் உள்ள நடைமேடையில்  மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய காணொலியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்.
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இன்று பலதரபட்ட மக்களும் பாஜக வை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன, அதற்கு முழு காரணம் மோடிதான். அவருடைய  தூய்மையான ஆட்சிதான் காரணம் என்று கூறினார்.
 
மேலும் நீட் தேர்வு மூலம்  13 பேரின் உயிரில் விளையாடியது திமுக தான் எனவும்,  மாணவர்களின் உயிர் இழப்பிற்கு முழு காரணம் திமுக மட்டும்தான் என  குற்றம் சாட்டினார்.
 
இன்றுபெரியரின் பிறந்தநாளுக்கு ஏன் நீங்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சமூக நீதிக்காக போராடியவர் பெரியார் அவருக்கு வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.
 
திராவிடத்தை  அழிக்க புதிய கலாச்சாரம் தோன்றி இருக்கிறது என்ற துரைமுருகன் கருத்துக்கு பதிலளித்த அவர், யாருடைய கலாச்சாரத்தையும் நாங்கள் மறைக்கவில்லை எனவும் எங்கள் கலாச்சாரத்தை  முன் நிறுத்துகிறோம் என்று அவர் கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...