???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் 0 காய்ச்சல், இருமல் இருந்தால் பஸ்சில் அனுமதி இல்லை: தமிழக அரசு 0 ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா: 13 பேர் உயிரிழப்பு 0 இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்: பிரதமர் மோடி 0 சென்னையில் இருந்து வெளியே சென்றால் கட்டாய கொரோனா பரிசோதனை 0 தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சர்ச்சைக்குரிய கேள்வித்தாளை நாங்கள் தயாரிக்கவில்லை: கேந்திரிய வித்யாலயா

Posted : சனிக்கிழமை,   செப்டம்பர்   07 , 2019  22:06:55 IST

சமூக வலைத்தளங்களில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வித்தாள் ஒன்று தற்போது வைரலாக பரவி தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதில் இடம்பெற்றுள்ள சரியான விடையை தேர்ந்தெடுக்கும் கேள்வி ஒன்று, ‘தலித் பிரிவினர் என்றால் தீண்டத்தகாதவர்கள்’ என்பது போன்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும் முஸ்லிம்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்று இருந்த இந்த வினாத்தாள் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இது அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய அந்த கேள்வித்தாள் போலியானது என கேந்திரிய வித்யாலயா நிர்வாகம் கூறியுள்ளது. இந்த வினாத்தாள் தொடர்பான எந்த ஆதாரமும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வரப்படவில்லை எனவும், இது கேந்திரிய வித்யாலயா பள்ளியின் வினாத்தாள் என தவறுதலாக கூறப்பட்டு இருக்கலாம் எனவும் விளக்கம் அளித்து உள்ளது.

இதைப்போல இந்த கேள்வித்தாள் இடைத்தேர்வுக்காக தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறியுள்ள சி.பி.எஸ்.இ. நிர்வாகம், எந்த பள்ளிக்கும், எந்த வகுப்புக்கும் இடைத்தேர்வுக்கான வினாத்தாளை நாங்கள் தயாரிப்பதில்லை என்றும், பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாளை மட்டுமே தயாரிப்போம் எனவும் தெரிவித்து உள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...