???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம்: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு. 0 பா.ஜனதா ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வாழ்க்கை குறிப்பு. 0 பேருந்து, ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் 0 சிறுவர்கள், மூத்த குடிமக்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைப்பு: 0 தமிழக அரசு மதுக்கொள்கையை மாற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு. 0 போரூர் மேம்பாலம் 25ஆம் தேதி திறப்பு 0 பத்து லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: 0 வெளிநாட்டுக்கான தூதரக அதிகாரி முதல் மக்களவை சபாநாயகர் வரை - மீரா குமார் வாழ்க்கை குறிப்பு 0 ஜிஎஸ்டி யை அமல்படுத்துவதால் அனைத்து வரிகளும் குறையும்.- உர்ஜித் படேல் கருத்து 0 குடியரசுத் தலைவர் பதவி: பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் 0 நம்பிக்கை வாக்கெடுப்பில் சிபிஐ விசாரிக்க முடியாது: முதலமைச்சர் 0 எம்எல்ஏ,எம்பிக்களுக்கு ஸ்டாலின் கோரிக்கை 0 எதிர்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் அறிவிப்பு 0 7 பேர் விடுதலை எப்போது?: சட்ட அமைச்சர் பதில் 0 வெற்றிகரமாக பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி38!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி - மடோனா!

Posted : புதன்கிழமை,   ஜுன்   08 , 2016  02:16:21 IST

அனேகன், தனி ஒருவன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தொடர்ந்து ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பிரம்மாண்டமான படம் உருவாகிறது. இப்படத்தினில் முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர் நடிக்க, விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், ப்ரேமம், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் நடித்த மடோனா செபஸ்டியன் கதாநாயகியாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கும் இத்திரைப்படத்தில் அபிநந்தன் ஒளிப்பதிவு செய்ய, கிரண் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். நிர்வாக தயாரிப்பு ஸ்.M. வெங்கட் மாணிக்கம்.

இப்படத்தினை கல்பாத்தி ஸ்.அகோரம், கல்பாத்தி ஸ்.கனேஷ், கல்பாத்தி ஸ்.சுரேஷ்,  ஆகியோர் தயாரிக்கின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து சுபா மற்றும் கபிலன் வைரமுத்து எழுதுகின்றனர். இயக்கம் கே.வி.ஆனந்த்.

ஜூலை மாதம் துவங்கவிருக்கும் இத்திரைப்படத்திற்கான மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...