???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று- தமிழகம் 3616, சென்னை 1203! 0 முன்னாள் எம்.எல்.ஏ மரணம்! 0 89 வயதில் தந்தையான கோடீஸ்வரர்! இன்னொரு குழந்தைக்கும் அடிபோடுகிறார்! 0 உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு 0 செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு 0 ரேஷன் கடைகளில் நவம்பர் மாதம் வரை விலையின்றி கூடுதல் அரிசி 0 என்.எல்.சி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு 0 குவைத் புதிய சட்டம்: தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேறும் அபாயம் 0 மன்னர் மன்னன் மரணம் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பு: மு.க.ஸ்டாலின் உருக்கம் 0 கொரோனா இன்று: தமிழகம்-3827 சென்னை-1747! 0 முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா! 0 ப்ளஸ்1- பழைய பாடத்திட்டமே தொடரும்! 0 தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! 0 தமிழகத்தில் மேலும் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி 0 கேரளாவில் கொரோனா கட்டுப்பாடுகள் 2021 ஜூலை வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குவைத் கிரிக்கெட் அணியில் ஆடும் தமிழர்!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   25 , 2019  03:18:27 IST


Andhimazhai Image
நாமக்கல்லை சேர்ந்த சங்கர் வரதப்பன், குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளார். சிங்கப்பூரில் அடுத்த மாதம் நடைப்பெறவுள்ள ஆசிய டி20 தகுதிப் போட்டிகளில் குவைத் அணியின் தொடக்க ஆட்டக்காரராக அவர் களமிறங்கபோகிறார்.
 
10-ஆம் வகுப்புக்கு பிறகு படிப்பை நிறுத்திவிட்டு, நூற்பு ஆலைக்கு வேலைக்குபோகும் நிலைக்கு தள்ளப்பட்டவர் சங்கர் வரதப்பன். அவர் இந்த நிலைக்கு முன்னேறி இருப்பதுதான் ஆச்சரியம். அவர் தன் படிப்பை தொடர காரணமாக இருந்தவர் அவரது சகோதரர் பெரியசாமி. 
 
''எங்களது குடும்பத்தில் யாரும் பள்ளி படிப்பையே முடிக்கவில்லை என்ற நிலை இருந்தபோது, சங்கருக்கும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அதனால் அவரை தொடர்ந்து படிக்க வைத்தோம். நாமக்கல்லில் பொறியியல் படித்த பின்னர் வேலை நிமித்தமாக முதலில் துபாய், பிறகு குவைத்துக்கு சங்கர் செல்லவேண்டியிருந்தது. இதன் பின்னர் குடும்பத்தின் விருப்பத்தையும் மீறி அவர் காதல் திருமணம் செய்துக்கொண்டார். குடும்பத்துக்கான கடமைகள், பணிகள் இவற்றுக்கிடையிலும் கிரிக்கெட் மீது அவருக்கு இருந்த உணர்வு குறையவே இல்லை" என்கிறார் பெரியசாமி.
 
தனது சொந்த ஊரான நாமக்கல் மாவட்டம், பச்சலில் கிரிக்கெட் பழகிய அனுபவம் குறித்து சங்கர் இவ்வாறு கூறுகிறார். "அப்போதெல்லாம் வார இறுதி நாட்களில் ஊரில் உள்ள கிரிக்கெட் க்ளப் மூலம் விளையாடுவோம். மாவட்ட அளவில் சென்ற பல்வேறு க்ளப் அணியில் விளையாடியிருக்கிறேன். பின்னர் 2014-ஆம் ஆண்டில் தரக் கட்டுப்பாட்டு பொறியாளர் பணிக்காக குவைத் சென்றேன். அங்கு பெரும்பாலான க்ளப் அணிகள் பாந்தேர்ஸ் மலபுரம், கொச்சின் ஹரிகேன்ஸ், இடுக்கி ஃபீனிக்ஸ் என கேரள நகரங்களின் பெயர்களைதான் கொண்டிருக்கும். அப்போது நான் ராயல் கிங்ஸ் திருவனந்தபுரம் அணிக்காக விளையாடினேன்" என்கிறார் சங்கர்.
 
ராயல் கிங்ஸ் திருவனந்தபுரம் அணியில் விளையாடியபோது, வெறும் 86 போட்டிகளில் 168. 55 ஸ்ட்ரைக் ரேட் விகிதத்தில் 3, 167 ரன்கள் குவித்ததுதான் சங்கருக்கு குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பை அளித்திருக்கிறது. 
 
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டிகளில் விளையாட முயற்சித்து, சங்கர் வாய்ப்பை இழந்திருக்கிறார். எனினும் துவண்டுவிடாமல் தீவிர பயிற்சியில் கவனம் செலுத்தி, அடுத்தகட்ட பணிகளை செய்ய தொடங்கினார். 
 
இப்போது சங்கர் குவைத் தேசிய அணியிலேயே இடம்பெற்றுவிட்டாலும், இன்னமும் நாமக்கல்லில் இருக்கும் அவரது மனைவி கோமதிக்கு கிரிக்கெட் பிடிப்பதேயில்லை. ஸ்கைப்பில் சங்கர் தன்னோடு பேசும் நேரத்தை கிரிக்கெட் பயிற்சி பறித்துக்கொள்கிறது என்பதே அதற்கு காரணம். 

English Summary
kuwait cricket team journey of sankar

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...