அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

குருதி ஆட்டம்: திரைவிமர்சனம்!

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   06 , 2022  10:16:40 IST


Andhimazhai Image

அன்பிற்காக எதையும் செய்யத் துணிபவரும், அராஜகத்தை விரும்பாத தாதாவும் ஒன்று சேர்வதே குருதி ஆட்டம் திரைப்படம்.


மதுரையில் மிகப்பெரிய தாதா ராதிகா.  அண்ணன் ராதா ரவி, மகன் கண்ணாரவி , அண்ணன் மகன் பிரகாஷ் ராகவன் என பெரிய பட்டாளத்துடன் வாழ்ந்து வருகிறார். இன்னொரு பக்கம் பெற்றோரை இழந்து, அக்கா மற்றும் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறார்  நாயகன் அதர்வா. டீச்சரான பிரியா பவானி சங்கரை காதலிக்கிறார். இடையில் சிறுமி ஒருவரைக் காப்பாற்றத் துடிப்பவருக்கு சிலபல சதிகள்/எதிரிகள். இன்னொரு பக்கம் கொலைமுயற்சியில் நூலிழையில் உயிர் பிழைக்கிறார் ராதிகா. இவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டது யார்? சிறுமியின் உயிரை அதர்வா காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.


படம் ஒரே கதையில் பயணிக்காமல் பல கிளைக்கதைகளாகப் பயணிக்கிறது. இயக்குநர் ஸ்ரீகணேஷ் இதை சரியாகக் கோர்த்திருந்தால் ஆட்டம் வேற மாதிரி இருந்திருக்கும். அதேபோல், அதர்வா - ரவிகண்ணாவின் நட்பு, வினோத் சாகரின் கையறு நிலை போன்றவை சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.


மதுரை கதை என்பதால் கத்தி, ரத்தம் இல்லாமலா இருக்கும். கத்தி சத்தம் இப்போதும் காதை கிழித்துக் கொண்டிருக்கிறது. அதர்வாவின் கதாபாத்திர உருவாக்கம் வலுவாக இல்லாததால், படம் அவரை மையமிட்டு நகராதது போல் தெரிகிறது. இருப்பினும் ஆக்‌ஷன் மற்றும் காதல் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். முதல் பாதியின் தொடக்கத்தில் இறுக்கமான முகபாவத்துடன் இருக்கும் பிரியா பவானி சங்கர், காதல் வந்த பிறகு மிளிர்கிறார். கம்பீரமான உடல் மொழியில் தாதாவாக வரும் ராதிகா சரத்குமாரின் நடிப்பு புதிய பரிணாமம். வாட்சன் சக்ரவர்த்தி, ராதாரவி, வினோத் சாகர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் உயிர்ப்புடனே நடித்துள்ளனர்.


யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் துவக்கத்திலேயே நம்மை உள்ளிழுத்துவிடுகிறது. யுகபாரதியின் பாடல் வரியில் அந்தோணிதாசன் குரலில் வரும் ‘ரங்கராட்டினம் போல’ அசைபோட வைக்கிறது. கபடிப் போட்டியையும், சண்டைக்காட்சிகளையும் அதே பரபரப்புடன் ஒளிப்பதிவு செய்துள்ளார் தினேஷ் புருஷோத்தமன்.


கபடி, காதல், ஆக்‌ஷன், பழிவாங்கல் என  மாஸ் கமர்சியலுக்கான கண்டெண்ட் இருந்தும், படம் மனதில் நிற்கவில்லை. படத்திற்கு ஏற்ற தலைப்பு என்பதால், இறுதிக் காட்சி வரை ரத்தத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது.

 குருதி ஆட்டம் காற்றில் கத்தி வீசுகிறது.  

தா.பிரகாஷ்



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...