???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஈராக்கில் இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்! 0 பாஜக பொங்கி எழுந்தால் தமிழகம் தாங்காது: தமிழிசை சவுந்தரராஜன் 0 குக்கர் சின்னம் வழக்கு: விரைந்து விசாரிக்க ஓபிஎஸ், ஈபிஎஸ் கோரிக்கை 0 ஜி.எஸ்.டி. திருத்தியமைக்க 10 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம் 0 பாஜகவுடன் கூட்டணியும் இல்லை; ஆதரவும் இல்லை: முதலமைச்சர் 0 டிஜிபி வளாகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயற்சி 0 மீண்டும் மணல் குவாரிகள்: நாளை டெண்டர் விடுகிறது தமிழக அரசு! 0 ரத யாத்திரை எதிர்ப்பு போராட்டம்: திமுக எம்எல்ஏக்கள் மீது வழக்குப்பதிவு 0 144 தடை மத ஊர்வலங்களுக்கு பொருந்தாது: ஹெச்.ராஜா 0 விஸ்வரூபம் எடுக்கும் பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம்! 0 அ.தி.மு.க கொடிக்கம்பத்தில் பா.ஜ.க கொடி! 0 மியான்மர் அதிபர் திடீர் ராஜினாமா! 0 ம.நடராஜனுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் 0 முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே நடராஜனின் உடல் இன்று மாலை அடக்கம்! 0 கடைசி பந்தில் சிக்சர்: தினேஷ்கார்த்திக்கு மியாண்டட் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

குரங்கணி காட்டுத்தீ குறித்து விசாரிக்க விசாரணை அதிகாரி நியமனம்!

Posted : புதன்கிழமை,   மார்ச்   14 , 2018  09:40:28 IST

தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் கடந்த 11-ம் தேதி நேரிட்ட கட்டுங்கடங்காத காட்டுத் தீயில் சிக்கி, மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
 
வனத்துறை அனுமதியின்றி மலையேற்ற பயிற்சி மேற்கொண்டதால், காட்டுத் தீயில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுல்ய மிஸ்ராவை விசாரணை அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
அதன்படி, குரங்கணி வனத்தில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம், காப்புக்காடு விதிகள், மலையேற்ற பயிற்சி விதிகளில் செய்யப்பட வேண்டிய திருத்தம் உள்ளிட்ட அம்சங்கள் விசாரணை அதிகாரி ஆய்வு செய்து, 2 மாதத்திற்குள் அறிக்கை அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே சென்னை பாலவாகத்தில் உள்ள டிரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வீடு மற்றும் அலுவலகத்தில், தேனி காவல் ஆய்வாளர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீலாங்கரை காவல் நிலையம் சென்ற தனிப்படையினர் டிரெக்கிங் கிளப் குறித்த விவரங்களை சேகரித்தனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...