???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பு 173,763 ஆக உயர்வு 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது! 0 சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்றலாம்: முதலமைச்சர் உத்தரவு 0 தீபாவும், தீபக்கும் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்: தீர்ப்பில் திருத்தம் செய்த உயர்நீதிமன்றம் 0 பொன்மகள் வந்தாள்- விமர்சனம் 0 ஒரு லட்சம் பேர் உயிரிழப்பு என்ற மிகவும் சோகமான சாதனை: டொனால்டு டிரம்ப் 0 கொரோனா பாதிப்பில் 9-வது இடத்தில் இந்தியா 0 கொரோனா பாதிப்பு எண்ணிக்கையைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 கொரோனா கட்டுக்குள் அடங்காமல் உள்ளது என்பதை அரசு உணரவேண்டும்: மு.க.ஸ்டாலின் 0 புலம்பெயர் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது; உணவு தரவேண்டும்: உச்சநீதிமன்றம் 0 சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தினால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும்! 0 கொரோனா நிலவரம்: தமிழகம் : 827; சென்னை : 559 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு - திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   டிசம்பர்   06 , 2019  05:15:37 IST


Andhimazhai Image

இரண்டாம் உலக போரில் பயன்படுத்தி வெடிக்காத குண்டு மூலம் பழைய இரும்புக்கடையில் இரவு பகலாக உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கையை அசலாக பதிவு செய்திருக்கிறார் புதுமுக இயக்குநர் அதியன் ஆதிரை. இது தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திராத இன்னொரு வாழ்க்கை

 

உலகப்போரில் வெடிக்காத குண்டுகளைச் செயலிழக்க செய்வதாகச் சொல்லி அதன் டெண்டரை வாங்கிய அமெரிக்க நிறுவனமும்- இந்தியாவில் செயல்படும் போலி நிறுவனமும் அதை கடலில் கொட்டிவிட்டதாக கூறப்பட்ட தகவலில் தொடங்கி படம் நிற்காமல் போய்க்கொண்டே இருக்கிறது.

 

பழைய இரும்புக் கடையில் பணிபுரியும் லாரி ஓட்டுநர் செல்வமாக தினேஷ் வாழ்ந்திருக்கிறார். இரும்பு பொருட்களை தூக்கும் விதம், லாரி ஓட்டும் பாணி என்று எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருக்கிறார். அட்டகத்தி,  குக்கூ, விசாரணை, இப்படியான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் தினேஷுக்கு இந்த படம் நிச்சயம் வெகுமதியை அளிக்கிறது.

 

சிட்டாக வரும் ஆனந்தி மற்றும் இடதுசாரி போராளி மற்றும் பத்திரிக்கையாளராக வரும் ரித்விகா இருவரும் அலட்டிக்கொள்ளாமல் அசத்தியிருக்கிறார்கள். காதல் காட்சிகளில் தினேஷின் நடிப்பை மிஞ்சும் நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார் ஆனந்தி.

 

படத்தில் இசை மற்றும் பின்னணி இசையின் பங்கு குறிப்பிடதக்கது. இரும்பு பொருட்களின் ஓசை, வெடிக்காத குண்டு காட்டப்படும்போது வரும் பின்னணி இசை,  தெருக்கூத்து, ஊர் விழாக்களில் இடம்பெறும் வாத்தியங்கள் இப்படி எல்லாவற்றையும் இணைத்து அசத்தியிருக்கிறார் தென்மா.

 

படத்தின் இறுதியில் வரும் காட்சியில் போரில் தப்பித்த ஜப்பானிய முதியவர் ஒரு கதை சொல்வார்: ‘’ ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்க குளத்தில் குதித்தேன். குளம் முழுக்க பிணக்குவியல். அந்த குவியலில் 10 நாட்கள் தேடி எனது மகளை கண்டுபிடித்தேன். அவள் உயிரோடு இருந்தாலும் அணுக் கதிர்களால் பாதிக்கப்பட்டிருந்தாள். ரத்த புற்றுநோயால் 10வது வயதில் அவர் மரணமடைந்தாள். அவள் மரணிப்பதற்கு முன். அவளது தோழி 1000 காகித கப்பல்கள் செய்தால் நோய் குணமாகிவிடும் என்று அவளிடம் கூறியிருந்தார். ஆனால் என் மகள் 756 கப்பல்கள் செய்யும்போதே இறந்துவிட்டாள். அதனால் அவர் சவப்பெட்டி நிறைய காகித கப்பல் செய்து அடக்கம் செய்தோம்’ என்று..

 

பாதுகாப்பு என்ற பெயரில் ஆயுதங்கள் வாங்குவது, ராணுவ தளவாடங்களை உருவாக்குவதுதான் நாகரீகமா? என்ற முக்கியமான கேள்வியை இயக்குநர் கேட்டிருக்கிறார். பெரும் நாயகர்களின் சினிமாக்களை அடித்துப் பிடித்துப் பார்க்கும் ரசிகர்கள் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களையும் சென்று பார்க்க வேண்டும்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...