???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்த ஆட்சி கடவுள் எனக்கு அளித்த பரிசு - குமாரசாமி உருக்கம்

Posted : சனிக்கிழமை,   ஜுலை   20 , 2019  02:26:14 IST


Andhimazhai Image
கர்நாடக சட்டப்பேரவையில் தொடர்ந்து அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது முதல்வர் குமாரசாமி நேற்று உரையாற்றினார் .
 
அப்போது உருக்கமாக பேசிய குமாரசாமி, "நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் முதல்வர் ஆனேன். தேர்தலுக்கு பிறகு அரசியலில் இருந்தே விலகிவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்த என்னை முதல்வர் பதவியை ஏற்கும்படி காங்கிரஸினர் வலியுறுத்தினர்.
 
இப்போதும் எனக்கு முதல்வராக இருக்க வேண்டுமென்கிற ஆசையெல்லாம் இல்லை. இது எனக்கு விதியால் கிடைத்த பதவி. ஆனால், எனக்கு பதவி கிடைத்த விதத்தை வைத்து பாஜகவினர் என்மீது குற்றம் சொன்னார்கள்.
 
இந்த ஆட்சி கடவுள் எனக்கு அளித்த பரிசு. இதனை எப்போது வேண்டுமானாலும் அவர் திரும்ப எடுத்துக் கொள்ளலாம். விதியின் விளையாட்டில் நான் சிறிய அங்கம் மட்டுமே. 
 
எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் கடவுள் பக்தி அதிகம்.  பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் எனது சகோதரர் எச்.டி.ரேவண்ணா பில்லி சூனியத்தின் மூலம் ஆட்சியை தக்கவைத்திருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர். கோயிலுக்கு சென்று கடவுளை தரிசிக்காமல் எனது சகோதரர் அன்றைய நாளை தொடங்கமாட்டார். மகாலட்சுமி கோயிலுக்கு சென்றால் அங்கு அர்ச்சகர் அளிக்கும் ஏலக்காய் மாலையை அவர் அணிந்துக்கொள்வார். ஆஞ்சநேயர் அல்லது காளி கோயிலுக்கு செல்லும்போது அங்கு அளிக்கப்படும் எலுமிச்சையைப் பெற்றுக்கொள்வார். இதனை வைத்துதான் எனது சகோதரர் மாய மந்திரம் செய்து ஆட்சியை தக்கவத்துக்கொள்வதாக கூறுகின்றனர். பாஜகவினர் கோயிலுக்கு செல்லும்போது இதே பிரசாதம் கொடுக்கப்பட்டால் வாங்கமாட்டார்களா? நாங்கள் கடவுளையும் நம்புகிறோம், வாக்களித்த மக்களுக்கும் உண்மையாக இருக்கிறோம். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்வது தான் தவறு" என்று கூறினார்.
 

English Summary
Kumaraswamy speech on karnataka assembly

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...