அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 எட்டாவது முறை பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்! 0 பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும் – சசிகலா 0 ஒன்றாகத் தேர்வு எழுதி, ஒன்றாகத் தேர்ச்சி பெற்று, அரசு வேலைக்கு செல்லும் தாய் – மகன்! 0 பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி! 0 போதைப் பொருள் விற்பவர்கள் சொத்துகள் முடக்கப்படும் – முதலமைச்சர் 0 நிதிஷ் குமார் செய்தது நம்பிக்கை துரோகம்: பா.ஜ.க. 0 கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் 0 அரசியல் பேச ஆளுநர் மாளிகை கட்சி அலுவலகம் அல்ல: சிபிஐ(எம்) கண்டனம் 0 முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின் பதில் 0 பீகாரை போல் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: திருமாவளவன் 0 நான் பேசியது சட்டத்துக்கு புறம்பானது இல்லை: கனல் கண்ணன் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் 0 செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற தமிழக வீரர்கள்! 0 ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதீஷ் குமார்! 0 அதிமுகவின் முதல் எம்பியான மாயத்தேவர் காலமானார்! 0 அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

குலுகுலு எப்படி இருக்கிறது?

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   31 , 2022  16:40:48 IST


Andhimazhai Image
காணாமல் போகும் இளைஞரை மீட்கும் குழு, தங்கையை தேடிக்கொலைசெய்யத் துடிக்கும் குழு, இவைகளின் டார்க் ஹூமரே குலுகுலு திரைப்படம்.
 
 
அமேசான் காட்டில் வாழும் ஒரு பழங்குடி இனம் வெள்ளையர்களால் அழிக்கப்படுகிறது. எல்லோரும் இறந்து போக, அதிலொரு பொடியன் மட்டுமே தப்பிக்கிறான். நாடுகள் பலவற்றை சுற்றி மொழிகள் பலவற்றை கற்று கடைசியில் சென்னையில் தஞ்சமடைகிறான். அவர் தான் சந்தானம் (கூகுள்). எதைக் கேட்டாலும் சொல்வார், யார் வந்து உதவி என்று கேட்டாலும் ஓடோடி செய்யவார். இப்படியான நிலையில், சில இளைஞர்கள் தன்னுடைய நண்பனைக் காணவில்லை என்றும் அவனைக் கண்டுபிடித்துத் தருமாறும் சந்தானத்திடம் உதவி கேட்டு வருகின்றனர். இறுதியில் அந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டாரா இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
 
காணாமல் போகும் இளைஞரை மீட்பது தான் படத்தின் மையக் கதை என்றாலும், அதைச்சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் கிளைக் கதைகள் வித்தியாசமானவை. பழங்குடிகள் மீதான ஆக்கிரமிப்பு, மொழிப்பற்று, சாராய மாஃபியாக்களின் அராஜகம், பப்ஜி, 2கே கிட்ஸ்களின் உலகம் என படம் கலகலப்பாக நகர்கிறது. 
 
சந்தானம் ஏறக்குறைய ராக்கி பாய் தோற்றத்தில் வருகிறார். நடிப்பில் வித்தியாசம் காட்ட முயன்றிருக்கிறார். அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி இருவரும் படத்திற்குத் தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். ஜார்ஜ் குழுவினர் வரும் காட்சிகள் சிரிப்பலையால் அரங்கம் குலுங்குகிறது. சாய் தீனா, பிரதீப் ராவத் அழுத்தமான நடிப்பை பதிவு செய்கின்றனர்.
 
டார்க் காமெடியில் கலக்கியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை சக்கை போடு போடுகிறது. 'மாட்னா காலி', 'அம்மா நாநா' பாடல்கள் கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது. விஜய் கார்த்தி ஒளிப்பதிவும் அசத்தல்.
 
கதை நிகழும் இயல்பிலேயே வரும் வசனங்கள், கவனிக்க வைக்கின்றன. 'எல்லாத்தையும் மூடிட்டு இருந்தாதான் எனக்கு பத்தினி பட்டம் கிடைக்கும்னா எனக்கு அந்தப் பட்டமே வேண்டாம்' என்பது போன்ற வசனங்கள் யதார்த்தமாகவும் நுட்பமாகவும் எழுதப்பட்டுள்ளன.
 
ஒரு காமெடிக்கு சிரித்து முடிப்பதற்குள் இன்னொரு காமெடி வருவதால் குலுகுலு ரசிகர்களுக்கு நல்லா விருந்தாக இருக்கும். குலுகுலு, நல்ல கலகல.

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...