???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சினிமா வில்லன்களை மிஞ்சிய அரசியல்வாதி!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   17 , 2019  02:31:02 IST


Andhimazhai Image

நாட்டையே குலுக்கிய உன்னாவ் பாலியல் வன்கொடுமை  வழக்கில் உத்தரபிரதேச மாநில எம்.எல்.ஏ குல்தீப் சிங்கை  குற்றவாளி என்று டெல்லியில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திப்படங்களில் வரும் கொடூரமான வில்லன்களை விட மோசமாக இருந்திருக்கிறார் குல்தீப் சிங்.

 

2017-ல் நடந்தது இந்த பாலியல் வன்கொடுமை. அப்போது சிறுமியாக இருந்த ஒரு பெண்ணை குல்தீப் சிங்கும் அவரது ஆட்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். புகார் அளிக்க முயன்ற குடும்பத்தையே காலி செய்துவிட்டார் குல்தீப் சிங்.

 

அப்பெண்ணின் தந்தையை பொய்வழக்கில் கைது செய்யவைத்து, அவர் சிறையில் மரணமடைந்தார். அப்பெண் பயணம் செய்த கார்மீது  மர்மமான வாகனம் மோதி இரண்டு அத்தைகள் கொல்லப்பட்டனர். மற்றும் அந்த பெண்ணின் மாமா சிறையில் இருக்கிறார்.

 

இவ்வளவு கொடூரங்கள் நடந்தபிறகே சட்டத்தின் காதுகளில் அப்பெண்ணின் அவலக்குரல் விழுந்தது. கார் விபத்தில் படுகாயம் அடைந்த அந்தப் பெண் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் குல்தீப் சிங்க்குக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு லக்னோ நீதிமன்றத்திலிருந்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

 

குல்தீப் சிங்கின் அரசியல் பாதை பல கட்சிகள் மாறிவந்துள்ளது. உத்திரபிரதேசம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள  மஹி கிராமத்தின் ஊர் தலைவராக 1996 ஆம் ஆண்டு குல்தீப் சிங் செங்கர்  தேர்வு செய்யப்படுகிறார். இங்கிருந்து அவரது அரசியல் பயணம் தொடங்குகிறது. இவரது தாய் இரண்டு முறை ஊர் தலைவராக இருந்தவர். இவரது  சகோதரர் அதுல் சிங்கின் மனைவி  அர்ச்சனாதான் மக்கி கிராமத்தின் தற்போதைய ஊர் தலைவர்.

 

1996 ஆண்டுக்கு பிறகு குல்தீப் சிங் செங்கர்  காங்கிரஸ் இளைஞரணியில் இணைந்தார். அதிலிருந்து அவருக்கு அரசியலில் ஏறுமுகம்தான். 2002 ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக உன்னாவ் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு உத்தரபிரதேச சட்டசபைக்குள் நுழைந்தார்.

 

2007 ஆம் ஆண்டு இவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். பங்கர்மாவ் என்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு அதே கட்சியில் தொடர்ந்த அவர் 2012 ஆம் ஆண்டு பகவந்த்நகர்  சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பிறகு 2016-ல் அந்த கட்சியையும் எதிர்த்துக்கொண்டார். சொந்த கட்சி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக மனைவி சங்கிதாவை மாவட்ட பஞ்சாயத்து தேர்தலில் வெற்றியடைய வைத்தார். இதனால் இவருக்கும் கட்சிக்கும் முரண்பாடு ஏற்பட்டது.

 

2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலையொட்டி அவர் பாஜகவில் இணைந்தார். பங்கர்மாவ் தொகுதியில் போட்டியிட்டு எம் எல் ஏவாக தேர்வாகினார். இது இவரின்  நான்காவது வெற்றியாகும்.

 

இவரின் தம்பி மனோஜ் சிங் என்பவர் 2005 முதல் 2010 வரை மியாங்கன்ஞ் பகுதியில் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். 

 

செல்வாக்கு மிகுந்த அரசியல்வாதிக்கு எதிரான வழக்கு இது. 2017-ல் குற்றம் சாட்டப்பட்டாலும் பெரிய அளவில் இவ்வழக்கு கவனம் பெற்ற பிறகே இவர் பாஜக கட்சியில் இருந்து 2019-ல் நீக்கப்பட்டார்.

 

குல்தீப் சிங்க்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்கள் டிசம்பர் 20 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...