???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தயாரிப்பாளருக்கு இம்சை அரசனாக மாறிய நகைச்சுவை நடிகர்! 0 சசிகலா குடும்பம்தான் சோதனைக்கு காரணம்: தீபா குற்றச்சாட்டு 0 போயஸ் இல்லத்தில் ரெய்டு நடத்தியது மனவேதனை அளிக்கிறது: மைத்ரேயன் 0 போயஸ் இல்லத்திலிருந்து லேப்டாப், பென் டிரைவ், கடிதங்கள் பறிமுதல்: விவேக் தகவல் 0 ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்யும் துரோகம்: டிடிவி தினகரன் 0 போயஸ் இல்லத்தில் வருமானவரி சோதனை 0 சொகுசுக்கார் இறக்குமதி வழக்கு : நடராஜனுக்கு தண்டனையை உறுதி செய்தது நீதிமன்றம்! 0 திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அ.தி.மு.க ஆதரவு எம்.எல்.ஏக்கள்! 0 அறம் படத்தின் கதை என்னுடையதில்லை : கோபி நயினார் 0 தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு 0 நாச்சியார் படத்தில் ஜோதிகாவின் வசனம்: மாதர் சங்கம் எதிர்வினை 0 பேரறிவாளன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிக்கலாம்: தீர்ப்பு அளித்த நீதிபதி கே.டி.தாமஸ் 0 கருணாநிதியுடன் அதிமுக கூட்டணி கட்சி எல்ஏக்கள் சந்திப்பு 0 நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது 0 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ஒத்திவைப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்தி நாவலாசிரியருக்கு ஞானபீட விருது!

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   04 , 2017  04:26:10 IST


Andhimazhai Image

இந்தி மொழியின் மூத்த எழுத்தாளர் கிருஷ்ண சோப்தி 2017ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேற்று டெல்லியில்  நம்வார்சிங் தலைமையில் கூடிய ஞானபீட விருதுக்குழு ஒருமனதாக கிருஷ்ண சோப்தியைத் தேர்வு செய்தது.

 

இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜராத்தில் 1925 ஆம் ஆண்டு பிறந்த சோப்தி ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவார். இதுவரை ஏழு நாவல்களும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும், ஐந்து மொழிபெயர்ப்புத் தொகுதிகளும் என எழுத்துலகில் கணிசமான பங்களிப்பை வழங்கியவர் கிருஷ்ண சோப்தி. 1980ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதை தனது ஸிந்தகிநாமா என்னும் நாவலுக்காகப் பெற்ற கிருஷ்ண சோப்தி, சாகித்ய அகாதமி பெலோஷிப்பையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை வாழ்நாள் இலக்கிய சேவைக்காக கதா சூடாமணி விருது, ஷிரோமணி விருது, ஹிந்தி அகாதமி விருது, ஹிந்தி அகாதமியின் ஷலகா விருது, மைதிலி சரன் குப்தா சம்மான் விருது, க்ராஸ் வோர்ட் விருது என பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் இவர் பெற்றுள்ளார்.

 

1944 ஆம் ஆண்டு சிறுகதை எழுத்தாளராக இலக்கிய உலகில் அறிமுகம் ஆன கிருஷ்ண சோப்தி பின்னாளில் அதிகமும் நாவல் எழுதுவதில் கவனம் செலுத்தினார். இவரது எழுத்துகள் பெரும்பாலும் இந்திய பாகிஸ்தான் பிரிவினை, ஆண் பெண் உறவுச்சிக்கல்கள், மாறிவரும் சமூகங்களின் நன்மை தீமைகள், அதனால் அதிகமும் பாதிப்புறும் மனித விழுமியங்கள் என இவற்றை மையமிட்டே அமைந்தன. எழுபது ஆண்டுகால இந்தியாவின் சமூக யாதார்த்த வாழ்க்கை இவரது எழுத்துகளில் அழுத்தமாகப் பதிவாகியுள்ளன என்பது மிகையான பாராட்டு அல்ல. ’’எல்லைகளை தவிடு பொடியாக்கிய நாவலாசிரியர் கிருஷ்ண சோப்தி. இந்தி மொழியை தனது படைப்புகளால் வளமூட்டியவர்’’ என்னும் ஞானபீட விருதுக் குழுவின் மனம் நிறைந்த பாராட்டு நமக்கு உணர்த்துவதும் இதைத்தான்.      

 

கிருஷ்ண சோப்தியின்  ’தார் சே பிச்சூடி’, மித்ர மர்ஜனி’, ’தில்-ஓ-தனிஷ்’, ’பத்லொம் கி கர்ஹே’, அ லடுக்கி’ ஆகிய நாவல்கள் ஆங்கிலம், ரஷ்யன் மற்றும் ஸ்வீடிஷ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கிருஷ்ண சோப்தி இந்தி இலக்கிய உலகில் தனது தனித்த எழுத்துநடைக்காகவும், மொழியின் நவீனத்துக்காகவும், பழமையை சாடிய தீவிர கதாபாத்திரங்களுக்காகவும் என்றும் நினைவு கூறப்படுவார் என்பதில் ஐயமில்லை. இந்து உருது மற்றும் பஞ்சாபி மொழிகளின் கலாச்சாரக் கலவை இவரது எழுத்தின் வழி நாம் வாசிக்கமுடியும். 

 

 

- சரோ லாமா -click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...