???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியங்களுடன் கி.ரா – 2, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜனவரி   26 , 2016  23:13:12 IST


Andhimazhai Image

 

04.02.2003

 

பிரியம் நிறைந்த சாந்தி தம்பதியருக்கு நலம்.

 

24.01.03 தேதிய கடிதம் வந்தது.

 

பாடாமல் இருந்து ரொம்ப நாள் கழித்துப் பாடும் குரல் போல சாந்தியின் கடிதம் இருந்தது.

 

கடிதம் எழுதும் பேனாவை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேனும் போலிருக்கு. கைப்பழக்கம் இருந்து கொண்டேயிருந்தால் இரும்புச் சாவியும் வெள்ளிச்சாவி போல் மிளிரும்.

சங்கமிக்குப் பொழுது நகர்வது இங்கே சிரமமாக இருந்தது. நல்ல வேளையாகப் பூக்கள் அவளுக்குக் கை கொடுத்தது.

பையனுக்கு ரெண்டு தரம் கோவிக்க மட்டுமே முடிந்தது. அவன் கோபித்துக்கொண்டு இருப்பதும் ஒரு ’அளகு’ தாம்!

“வரப்போகும் காலங்களில் நண்பர்கள் மட்டுமே உறவுக்காரர்களாக இருப்பார்கள்” என்று நீ எழுதியிருப்பது சத்தியமான வார்த்தைகள்.

மனசுக்குப் பிடிக்காவிட்டால் நண்பர்கள் விலகிப் போய்விடுவார்களே தவிர பகையாளிகளாக ஆகமாட்டார்கள். ராமாயணத்தில் ராமனுக்கு உதவியவர்கள் எல்லாம் நண்பர்கள். மகாபாரதத்தில் உறவுக்காரர்களெல்லாம் பகையாளர்கள்! மொத்தத்தில் இரண்டிலும் நண்பர்களே உதவியாளர்கள். காலம் போய்க்கொண்டே இருக்கிறது.

யாருக்காகவும் எதுக்காகவும் அது நிற்பதில்லை. புதுவைக்கு நாங்கள் வந்து பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. வியாழன் கிரகத்தில் இருப்பவனிடம் சொன்னால் ஒரு வருசமும் இரண்டு வாரந்தானே ஆகிறது என்பான்.

குளிர் விட்டுக்கொண்டே வருகிறது. கோடை வந்து கொண்டே இருக்கிறது. கோடையும் கடுமையாகவேதான் இருக்கும்.

 

பிரியங்களுடன்

 

 

 

( கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள் )



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...