அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை: கே.பி.முனுசாமி

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   26 , 2021  11:00:39 IST

அ.தி.மு.க.வில் சசிகலாவை மீண்டும் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
 
அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது என ஒரு தெளிவான முடிவை ஏற்கனவே தலைமை கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இது தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவிற்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே, சசிகலாவை மீண்டும் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை.
 
சசிகலாவிற்கு உண்மையாகவே அ.தி.மு.க. மீது பற்று இருந்தால், அவர் ஜெயலலிதாவிடம், நானோ எங்கள் குடும்பத்தினரோ அரசியலுக்கு வர மாட்டோம் என கடிதம் கொடுத்தார். அதன்படி நடந்து கொள்ள வேண்டும். கட்சியை சிறப்பாக நடத்துங்கள் என கூறினால் ஜெயலலிதாவிற்கு உண்மையான சகோதரியாக சசிகலா இருப்பார்.
 
அ.தி.மு.க. ஒரு காலமும் சாதி, மதரீதியாக செயல்படாது. தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது நாங்களும் மகிழ்ந்தோம். எதிர்கட்சியினர் எங்களை பாராட்டுவார்கள் என கூறினார். ஆனால், செயல்பாட்டுக்கு வரும் போது எதிர்மாறாக செயல்படுகிறார். 6 மாத கால தி.மு.க. ஆட்சியில் சொல்லும்படியாக ஒரு பணி கூட நடைபெறவில்லை. இதனை எதிர்கட்சியாகிய நாங்களும் கவனித்து வருகிறோம். தலைமை கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி போராட்டங்களில் ஈடுபடுவோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...