???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி! 0 அனுமதி இல்லாமல் உள்ளே வரக்கூடாது: சிபிஐக்கு ஆந்திர அரசு தடை 0 கஜா புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் மோடி விசாரிப்பு 0 புயலில் மரணமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு 0 கஜா புயலால் 12,000 மின் கம்பங்கள் பாதிப்பு: அமைச்சர் தங்கமணி தகவல் 0 கஜா புயல்: 10 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை 0 கஜா புயல் பாதிப்புகளை வேதாரண்யம் செல்கிறார் மு.க. ஸ்டாலின் 0 புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: ராமதாஸ் 0 பத்து மாவட்டங்களை சூறையாடிய கஜா புயல்! 0 கஜா புயலுக்கு இதுவரை 20 பேர் பலி 0 கரையைக் கடந்தது கஜா புயல்! 0 கஜா புயல்: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து! 0 அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ‘நியூஸ் ஜெ’ தொடக்கம்! 0 சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம் 0 இத்தாலியில் நடந்த தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயர் மாற்றம்: இனி எம்ஜிஆர் பேருந்து நிலையம்!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   10 , 2018  23:03:55 IST

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம் என்று மாற்றம் செய்து பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை நந்தனத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றும் போது,  கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
 
அதன்படி, இன்று  கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பெயரை புரட்சி தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ரின் பேருந்து நிலையம் என்று மாற்றி பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 1996௨001 ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் கோயம்பேடு பேருந்து நிலையத் திட்டம்  தொடங்கப்பட்டது. கடந்த 2002 ஆம் ஆண்டு கட்டடப் பணிகள் நிறைவுற்றப்போது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 
இந்நிலையில் பெயர் மாற்றம் அறிவித்தவுடன் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.  அடுத்தவர் குழந்தைக்குத் தன் கட்சியின் நிறுவனர் பெயரை வைக்க அதிமுக ஆசைப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...