???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்களவையில் பெரும்பான்மை இருக்கலாம்; மக்களிடம் இல்லை: மம்தா பானர்ஜி 0 கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் 0 பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் 0 லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த ராமதாஸ் வேண்டுகோள் 0 நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பாஜகவுக்கு அதிமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின் விமர்சனம் 0 50 வருடங்களுக்கு முன் விபத்துக்குள்ளாகிய இந்திய விமான படையின் விமான பாகங்கள் கண்டுபிடிப்பு 0 ஒப்பந்ததாரர் வீடுகளில் ரெய்டு நிறைவு: ரூ.450 கோடி வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் சிக்கின! 0 புக்கெட்டுக்குப் போட்ட டிக்கெட்! - குட்வில் மோகன் 0 மக்களவையில் பிரதமரை ஆரத்தழுவி ராகுல் காந்தி நாடகம்: தமிழிசை காட்டம் 0 நம்பிக்கையில்லா தீர்மானம் காங்கிரசால் திணிக்கப்பட்டது: பிரதமர் குற்றச்சாட்டு 0 ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம்: ராகுல்காந்தி குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு 0 ஐந்து தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 0 ராகுல்காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம்: பாஜக அறிவிப்பு 0 நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் மக்களைச் சந்திப்பேன்: சீமான் பேட்டி 0 பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோமாளி கிங்ஸ்: முழுநீள இலங்கைத் திரைப்படம்!

Posted : புதன்கிழமை,   பிப்ரவரி   28 , 2018  04:37:16 IST


Andhimazhai Image

ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க இலங்கைத் திரைப்படக் கலைஞர்களின் பங்களிப்பில் வெளிவரும் படம் கோமாளி கிங்ஸ். இது முழு நீள நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். விரைவில் இலங்கையில் திரையிடப்பட உள்ளது. உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட காதல், நகைச்சுவை, சஸ்பென்ஸ், அதிரடி என சகல  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படம் இதுவாகும். கோமாளி திரைப்படத்தின் வரவு இலங்கைத் தமிழ்த்திரைப்படத் துறையில் ஒரு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். படத்தை நான்கைந்து தயாரிப்பாளர்கள் கூட்டு சேர்ந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை கிங் இரட்ணம் எழுதி இயக்கியுள்ளார். இவர் இலங்கை வானொலியின் முதுபெரும் கலைஞரான திரு.எம்.எஸ்.இரத்தினத்தின் பேரன் ஆவார். படத்தின் ஒளிப்பதிவாளராக மகிந்த அபேசிங்கவும், இசை அமைப்பாளராக ஸ்ரீராம் சச்சியும், படத்தொகுப்பாளராக அஞ்சலோ ஜோன்ஸ் என்பவரும் பணியாற்றியுள்ளனர். இந்தக் கதை குறித்து இயக்குநர் கூறுகையில் “ லண்டன் நகரிலிருந்து ஒரு சொந்தக்காரரின் திருமணத்திற்காக நாடு திரும்பும் பத்மநாதன் என்பவரின் குடும்பத்தினருக்கு ஏற்படும் எதிர்பாராத சம்பவங்களும் திருப்பங்களுமே மொத்த படத்தின் திரைக்கதையாக விரிகிறது.’’ என்றார். 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...