???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பண பட்டுவாடா விவகாரம்: சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல் 0 போதையில் வாகனம் ஓட்டி விபத்து: நடிகர் ஜெய் கைது! 0 இரட்டை இலையை மீட்க தமிழக அமைச்சர்கள் டெல்லி விரைவு 0 கிரிக்கெட் வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை 0 பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு:சோனியாகாந்தி பிரதமருக்கு கடிதம் 0 மாநில அரசுகளுக்கு சுயாட்சி தேவை: பினராயி விஜயன் 0 சமூக நீதிக்கு பெரும் தீங்கு உருவாகியுள்ளது: ஸ்டாலின் பேச்சு 0 கமல் அழைத்தாலும் இணைய மாட்டேன்: குஷ்பு 0 அரசு பள்ளிகளில் யோகா வகுப்புகள்: முதலமைச்சர் அறிவிப்பு 0 தமிழக விவசாயிகளின் நலன்களை காவு கொடுக்க மத்திய அரசு தயாராகி விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு 0 பண மோசடி வழக்கு : செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி மனு 0 முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு : கேரளா முதல்வர் பேட்டி 0 அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள்:முதல்வர் அறிவிப்பு 0 இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல்:பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்! 0 கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு: தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

செல்ஃபி மோகத்தால் 30 பேருக்கு தீ காயம்; சென்னையில் சம்பவம்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜுலை   16 , 2017  06:02:26 IST

சென்னை கொடுங்கையூரில் புதிதாக திறக்கப்பட்ட பேக்கரியில் ஏற்பட்ட தீ வி‌பத்தின் போது, எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 48 பேர் காயமடைந்தனர். இதனிடையே செல்ஃபி எடுப்பதற்காக ஏராளமானோர் தீ விபத்து ஏற்பட்ட கடை முன் குவிந்ததே அதிகமானோர் காயமடைய காரணம் என புகார் எழுந்துள்ளது.
 
கொடுங்கையூரில் கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் ஆனந்த் என்பவர் முருகன் ஹாட் சிப்ஸ் என்ற பெயரில் புதிய பேக்கரி ஒன்றை திறந்துள்ளார். நேற்று விற்பனை முடிந்து கடை மூடப்பட்ட சிறிது நேரத்தில் கடையில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, அதிகப்படியான தீ ஜூவாலை தாக்கியதில் விருதுநகரைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் படுகாயமடைந்தார். தொடர்ந்து தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் நடைபெற்ற போது, அங்கு கூடிய ஏராளமானோர் எரியும் கடை முன் செல்பி எடுக்க முயன்றனர். அவர்களை கொடுங்கையூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் விமலேஷ் விரட்டியும் பலர் முண்டியடித்து செல்பி எடுத்ததாகக் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
 
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் பேக்கரிக்குள் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்தது. அதில், மீட்புப்பணியில் இருந்த 8 பேர் மட்டுமின்றி, செல்ஃபி எடுப்பதற்காக கடை முன் குவிந்தவர்கள் பலரும் தீக்காயம் அடைந்தனர்.
 
தீக்காயம் ஏற்பட்ட 30 பேருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களை காவல்துறை கூடுதல் ஆணையர் சாரங்கன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேருக்கும், ராஜூவ்காந்தி பொது மருத்துவமனையில் ஒருவருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. ‌படுகாயமடைந்த கடையின் உரிமையாளர் ஆனந்த் உள்ளிட்ட இருவர் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர்
ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனிடையே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்ட தீயணைப்பு வீரர் ஏகராஜ் இன்று காலை உயிரிழந்தார்.
 
எதிர்பாராத வகையில் தீ விபத்து ஏற்பட்டிருந்தாலும், இதில் பொதுமக்கள் காயமடைந்ததற்கு செல்ஃபி மோகமே காரணம் என காவல்துறையினர் குற்றம்சாட்டுகின்றனர். இது போன்ற விபத்துகளில் மீட்புக்குழுவுக்கு உதவியாக இல்லை என்றாலும், செல்ஃபி எடுத்து நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...