அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அடுத்த திருப்பம்... ஷிண்டேதான் முதலமைச்சர்- பா.ஜ.க. அறிவிப்பு 0 கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவு: ஆய்வில் தகவல் 0 ஓராண்டில் 131 கோடி முறை பெண்கள் இலவசப் பயணம்! 0 மூன்றாம் பாலினத்தவர்கள் எம்.பி.சி. பிரிவில் சேர்ப்பு! 0 கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்தது 0 இரட்டைத் தலைமைதான் நல்லது: எம்.ஜி.ஆர் பேரன் 0 தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 0 நடிகர் சூர்யாவிற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 0 மதுரையில் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்! 0 உத்தவ் விலகல் - இனிப்புடன் பா.ஜ.க. கொண்டாட்டம் 0 பதவிவிலகினார் உத்தவ் தாக்கரே - மகாராஷ்டிரத்தில் திடீர் திருப்பம் 0 ராஜஸ்தானில் தையல் கடைக்காரரின் தலையைத் துண்டித்த கொலைகாரர்கள் கைது! 0 அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி! 0 நடிகை மீனாவின் கணவர் காலமானார்! 0 ப்ளூட்டோ முதல் ப்ளூட்டி வரை - 17: மருத்துவர் அகிலாண்ட பாரதி எழுதும் தொடர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

Posted : சனிக்கிழமை,   மே   21 , 2022  12:43:53 IST

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 
வடசென்னையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கு 258 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த கிடங்கிற்கு தினந்தோறும் 2,6000 மெட்ரிக் டன் கழிவுகள் வருகிறது. இந்த நிலையில், நேற்று காலை குப்பை கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 6 ஏக்கருக்கு தீ பரவியதால் அப்பகுதி முழுக்க புகை மண்டலமாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 
தீ விபத்தை அணைக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சியும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு, தீயை அணைத்தனர்.

 
விபத்து குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, “அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு இருப்பதால், அவற்றிலிருந்து வெளியேறிய மீத்தேன் வாயு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபோன்று நாட்டில் தினமும் 15 குப்பைக்கிடங்குகளில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. டெல்லி போன்ற இடங்களில் தீயை அணைக்க 15 நாட்கள் ஆகின்றன. இதுபோன்ற தீ விபத்து ஏற்பட்டால், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

 
கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் சுற்று சூழல் மாசு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில், தற்போது கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...