???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கோடநாடு கொள்ளை சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை: முதல்வர் மறுப்பு

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   12 , 2019  02:13:58 IST

கோடநாடு எஸ்டேட்டில் நடந்த தொடர் மரணங்களின் பின்னணி குறித்து தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ ஒரு ஆவணப்படம் போன்ற வீடியோவை நேற்று வெளியிட்டார். இதில் தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தான சில செய்திகள் சர்சையை ஏற்படுத்தி வருகின்றன.
 
இந்த கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை. கோடநாடு கொள்ளை தொடர்பாக நேற்று வெளியான வீடியோ குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேல் களங்கம் கற்பிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியலில் நேரடியாக எதிர்கொள்ள திராணியற்றவர்கள் இதுபோன்ற குறுக்கு வழியை கையாண்டுள்ளனர். இதில் அரசியல் பின்புலம் உள்ளது. உண்மை வெளிச்சத்துக்கு வரும். இதன் பின்னணியில் உள்ளவர்கள் விரைவில் வெளிவருவார்கள். அரசியலுக்காகத் தவறானத் தகவல்களைப் பரப்புகின்றனர்.” என்றார்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...