???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்!

Posted : புதன்கிழமை,   ஆகஸ்ட்   05 , 2020  02:04:33 IST

திமுகவின் ஆயிரம்விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.கு.க.செல்வம், கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உள்கட்சி அதிருப்தியால் அவர் பாஜகவில் சேரப்போவதாக தகவல் பரவிய நிலையில் அவர் நேற்று டெல்லியில் பாஜக தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்தார். ஆனால் அவர் பாஜகவில் இணையவில்லை. ஆனால் திமுகவில் இருந்துகொண்டே பாஜக ஆதரவு நிலையில் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. கட்சி மாறினால் அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோய்விடும்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் ராமர் பூஜையில் கலந்துகொள்வார் செல்வம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில்தான் குக செல்வத்தை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர் வகித்துவந்த தலைமை நிலைய அலுவலக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கபட்டு, அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...