???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  08:43:37 IST

தோல் பொருட்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய தொழில் மேம்பாட்டு திறன் துறை அமைச்சர் மகேந்திர பாண்டே மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், ’செருப்பு தைக்கும் தொழிலாளர்களின் வாழ்வியலை மேம்படுத்த மத்திய அரசின் சார்பில் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் மகேந்திரநாத் உறுதியளித்துள்ளதாக கூறினார். தரையில் அமராமல் அவர்களுக்கு தனியாக கூடம் அமைத்து, நாற்காலியில் அமர்ந்து தொழில் செய்யும் முறை விரைவில் கொண்டு வரப்படும் என்றார்.

இந்தியாவில் ஒரு லட்சம் செருப்பு தைக்கும் தொழிலாளர்களும், தமிழகத்தில் 10,000 தொழிலாளர்களும் இதனால் பலன் பெறுவார்கள் என்றார் அவர். கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு விரைவில் தொடங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அங்கு கிடைத்துள்ள பொருட்களைக் கொண்டு மிகப்பெரிய அருங்காட்சியகம்  அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...