???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு 0 தேர்தலுக்குப் பிறகே பிரதமரை முடிவு செய்வோம்: மம்தா, சித்தாராம் யெச்சூரி கருத்து 0 60 ஆண்டு கால தமிழக அரசியலை தீர்மானித்தவர் கருணாநிதி: சோனியா காந்தி புகழாரம் 0 தமிழகத்தின் கலாசாரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி: ராகுல் காந்தி 0 குட்கா முறைகேடு: முன்னாள் அமைச்சரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை 0 சசிகலா, தினகரன் இல்லாமல் அதிமுகவில் இணைய முடியாது: தங்க தமிழ்ச்செல்வன் 0 கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்காதது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம் 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடியில் தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன: தமிழக அரசு தகவல்

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   11 , 2018  23:45:57 IST

தமிழர்களின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் அவர்களது நாகரிகத்தையும் அறிவதற்கு கீழடியில் தொடர்ந்து அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென வழக்கறிஞர் கனிமொழி மதி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
 
அந்த மனுவை  நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு மேற்கொண்ட 4-ம் கட்ட அகழாய்வுப் பணிகளில் இதுவரை 7000-ம் மேற்பட்ட உலோகம் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
இதில் கலைநயத்துடன் கூடிய தங்க ஆபரணம் கிடைத்துள்ளதாகவும், இதன் வயதை கணக்கிடுவதற்காக கலிஃபோர்னியாவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளதாகவும் கூறினார்.
 
தமிழக அரசு சார்பில் கீழடியில் 5-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கும் விண்ணத்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரியத்தையும் அறிவது அவசியம் எனவும், தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கருத்து கூறிய நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொல்லியல் துறை பதிலதிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை  31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
 
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் குறி்த்த அறிக்கை தயார் செய்யும் பணியில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை சேர்க்க கோரிய மனுவும் விசாரணைக்கு வந்தது.
 
அதுதொடர்பாக மத்திய தொல்லியல்  ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...