???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல் குற்றச்சாட்டு 0 அயோத்தி வழக்கில் இறுதிகட்ட விசாரணை இன்று தொடக்கம்! 0 ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது வழக்குப்பதிவு 0 இன்ஸ்டாகிராமில் 3 கோடி பின் தொடர்பவர்களைப் பெற்ற பிரதமர் மோடி! 0 கீழடியில் ஆறாம் கட்ட ஆய்வு ஜனவரியில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 குப்பை அள்ளி மோடி விளம்பரம் தேடுகிறார்: திருநாவுக்கரசர் விமர்சனம் 0 சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்க: காங்கிரஸ் மனு 0 மோடி அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்தவரைப் பிடிக்க களம் இறங்கிய 100 போலீஸ்! 0 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவு: உலக வங்கி அறிக்கை 0 கோவையில் திருநங்கை போல் வேடமணிந்து வழிபறி செய்தவர்கள் கைது! 0 ஸ்டாலினால் அடுத்த முறை எம்.எல்.ஏ.கூட ஆக முடியாது: முதலமைச்சர் 0 இந்திய பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம் 0 தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு 0 அமித்ஷாவை விமர்சித்த வழக்கு: ராகுல் காந்திக்கு ஜாமீன்! 0 மேலும் 150 ரயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடி அகழ்வாய்வு: திண்ணை வடிவிலான திட்டு, சிமெண்டு சுவர் கண்டுபிடிப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  23:28:54 IST

திருப்புவனம் அருகே உள்ள கீழடி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கடந்த 2017-ம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. அதன் பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் மாநில தொல்லியல் துறையினர் இந்த அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் 5-வது கட்ட ஆராய்ச்சி பணிக்காக விவசாயிகள் கருப்பையா, முருகேசன், போதகுரு மற்றும் மாரியம்மாள் ஆகியோர் நிலங்களில் பல குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. முருகேசன் என்பவரது நிலத்தில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உறைகிணற்றில் 7 உறைகள் கொண்டதாக இருந்தது. இந்நிலையில் நேற்று அந்த கிணற்றில் மேலும் உறைகள் காணப்பட்டு தற்போது அவை 8 உறைகள் கொண்ட கிணறாக காட்சியளிக்கிறது.

இது தவிர முருகேசன் நிலத்தில் திண்ணை வடிவிலான சிறிய திட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் ஓரங்களில் பழைய மணல் பூச்சில் சுவர் போன்று அமைந்துள்ளது. அது பார்ப்பதற்கு சிமெண்டு கலவையால் ஆன சுவர் போன்று உள்ளது. மேலும் கருப்பையா என்பவரது நிலத்தில் கூடுதலாக 4 குழிகள் தோண்டவும், மாரியம்மாளின் சகோதரி நீதி என்பவரது தென்னந்தோப்பில் புதிதாக குழிகள் தோண்டி ஆராய்ச்சி செய்யவும், அதற்கான அந்த இடங்களை சுத்தம் செய்து அளவு குறியீடுகள் அமைக்கப்பட்டு வருகிறது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...