???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி 0 வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 0 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு 0 தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு 0 போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு 0 கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 0 இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு 0 மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு 0 குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு! 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   16 , 2020  21:43:00 IST

பிரதமரின் கிசான் திட்டம் தொடர்பாக அதிமுக,  திமுக, காங்கிரஸ் சார்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
அப்போது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி, கிசான் திட்டம் மத்திய அரசின் திட்டமாக இருந்தாலும் பெருபான்மையான பங்கை மாநில அரசு தான் ஏற்றுள்ளது.   இத்திட்டத்தின் முறைகேடு குறித்து வேளாண் துறை செயலாளரே  110 கோடி முறைகேடு நடத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
இதுவரை ஒப்பந்த ஊழியர்கள் தான் கைது செய்யப்படுகிறார்கள். இவ்வளவு பெரிய முறைகேடு நடந்து இருப்பதால், இதில் ஆளும் கட்சி ஆதரவு இருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. எனவே சிபிசிஐடி விசாரணை வேண்டாம் என்று தெரிவித்தார். அதோடு  சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
காங்கிரஸ் சார்பாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, விவசாயிகளை காப்பாற்ற வேண்டிய அரசு, விவசாயிகளுக்கு மிகப்பெரிய தீங்கு விளைந்திருக்கிறது என்று குற்றம் சாட்டினார். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இடைத்தரகர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
 
 
இதற்கு பதில் அளித்து பேசிய வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அதிக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை இந்த திட்டம் மூலம் 4365.67 கோடி ரூபாய் நிதி உதவி 6 தவணைகளாக வழங்கப்பட்டுள்ளது. புகார் பெறப்பட்டதன் தகவல் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 13 மாவட்டத்தில் முறைகேடுகள் நடைப்பெற்றது கண்டறியப்பட்டது என்று தெரிவித்தார். எனவே மறு உத்தரவு வரும் வரை புதிய பதிவுகளை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.தனியார் கம்பியூட்டர் சென்டர்கள் , இடைத்தரகர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. விசாரணை அனைத்து மாவட்டத்திலும் விரைவாக நடைப்பெற்று வருகிறது. இத்திட்டத்தில் தவறு இழைத்த ஒருவரும் தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் துரைக்கண்ணு உறுதிப்பட தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...