???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  00:35:25 IST

கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மூன்று ஹெக்டர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு  விவசாயிகள் பயன்பெறும் வகையில் பிரதமர் கிசான் நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் வங்கி கணக்கில் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் விவசாயிகள் அல்லாதோர் பலர் போலி அடையாள அட்டைகளை கொண்டு இத்திட்டத்தில் இணைந்துள்ளதாக புகார்கள் வந்தது. குறிப்பாக தமிழகத்தில் கடலூர்,விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
 
சுமார் 6 லட்சம் போலி விவசாயிகள் கிசான் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 110 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதாக தகவல் வெளியாகியது.
 
இந்த வழக்கை சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி பிலீப் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கபட்டு விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை வேளாண்துறையிடம் உள்ள மூன்று ஹெக்டர் நிலம் உள்ள சிறு, குறு விவசாயிகள் பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கும் பணி நடந்து வந்தது. அதன் மூலம் விவசாயிகள் அல்லாத யாரெல்லாம் பணம் பெற்று வந்தனர் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பட்டியல் சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி இனி கைது நடவடிக்கை தீவிரமடையும் என தெரிவித்துள்ள சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை 60 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
 
அதே போல, இந்த மோசடி தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் சிபிசிஐடி-யிடம் தெரிவித்தால் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், கடந்த 6 நாட்களில் மட்டும் 300 தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...