???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மக்கள் நீதி மய்யம்! கட்சிப்பெயரை அறிவித்தார் கமல்! 0 நீரவ் மோடி பண மோசடி குறித்தான பொதுநல வழக்கு இன்று விசாரணை 0 வங்கிகள் மீதான நம்பிக்கையை பா.ஜ.க சீர்குலைத்துவிட்டது: மம்தா பானர்ஜி 0 கமல் அரசியல் பிரவேசம்: கிரிக்கெட் வீரர் அஸ்வின் கருத்து 0 கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு- திருச்சியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம் 0 கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் விஷப் பரீட்சையில்தான் முடியும் – வைகைச்செல்வன் 0 அ.தி.மு.க.வில் இருந்து நல்லவர்கள் வந்தால் சேர்த்து கொள்வோம் – கமல்ஹாசன் 0 நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவசாய அமைப்புகளும் பங்கேற்பு 0 ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம்: ஓபிஎஸ், இ.பி.எஸ் அறிவிப்பு 0 செய்தியாளர்கள் சந்திப்பில் மீனவ பிரதிநிதிகளை மேடை ஏற்றிய கமல் 0 காகிதப் பூக்கள் மலராது: மு.க.ஸ்டாலின் 0 கோச்சடையான் பட வழக்கு: லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு 0 வருமானத்தை மக்களுக்கு பிரித்துக்கொடுக்க சிங்கப்பூர் அரசு முடிவு! 0 முதலமைச்சர் பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு 0 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியங்களுடன் கி.ரா – 31, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   08 , 2016  03:48:52 IST


Andhimazhai Image

12.01.55

 

இடைசெவல்

 

2-12-54ல் நீங்கள் எழுதிய கடிதத்துக்கு 12-1-55ல் பதில் எழுதுகிறேன்; போன வருஷம் போட்ட லெட்டருக்கு இந்த வருஷம் பதில் எழுதுகிறேன்! காரியங்கள் எவ்வளவு ஜரூராய் நடக்கிறது பாருங்கள்?

     

      “கத்துகடல் நாகன் காகுந்தன் சத்திரத்தில்

      அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

      உலையி(ல்) இட ஊர் அடங்கும், ஓர் அகப்பை

      இலையில் இட வெள்ளி எழும்!”

 

என்ற பாட்டு ஞாபகம் வருகிறதா?

 

“என்னுடைய லட்டர் பேடில் இதுதான் கடைத்தாள்” என்று முடிகிறது உங்கள் கடிதம். இதற்குள் லெட்டர் பேடு அச்சாகி இருக்கும். பாதி காலியாகக் கூட போய் இருக்கும்.

 

நேற்று தபாலில் ஒரு ‘மான்சூன்’ வந்தது எனக்கு. விலாசம் குத்தாலிங்கம் எழுத்து மாதிரி இருக்கிறது. இன்னும் படிக்கவில்லை. அக்காவின் குழந்தை குணமாகி ஊருக்குப் போய் விட்டான். (என்ன முழிக்கிறீர்கள், உங்கள் கடிதத்துக்கு பதில் எழுதுகிறேன் ஐயா!)

 

பேனாவைப் பராமரிக்கும் வித்தைச் சொல்லி இருக்கிறீர்கள் கடிதத்தில். அமுத்தி எழுதாமல் லேசாக லாவகமா எழுத வேண்டும் என்கிறீர்கள். அது முடியாத காரியம்.

 

பெண்களையும், குழந்தைகளையும் புஷ்பங்களைப் போல்த்தான் கையாள வேண்டும். நாமும் முதலில் அவர்களிடம் அப்படித்தான் நெருங்குகிறோம். உணர்ச்சி ஏற ஏற அதன் வசப்பட்டுவிடுகிறோம். வெறியே உண்டாய்விடுகிறது.

 

இது பேனாவுக்கும் பொருந்தும். நம்முடைய எழுத்துக்குள் முதலில் அச்சு குண்டாக ஆரம்பித்து, கடேசியில் தாறு மாறாக முடிவதின் காரணம் இப்பொழுது விளங்குகிறதா?

 

முதலில் பேனா கண்ணுக்குத் தெரியும், அப்புறம் பேப்பர் தெரியும், அப்புறம் எழுத்து தெரியும்; அப்புறம் ஒன்றுமே தெரியாது.

 

சரி. ரொம்ப நேரமாகிவிட்டது. விடை கொடுக்கிறீர்களா?

 

இக்கடிதத்தையே பொங்கல் வாழ்த்தாக ஏற்றுக்கொள்ளுங்கள்..

 

 

(கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள்)click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...