???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கோவை விபத்தில் காலை இழந்தப் பெண்ணுக்கு வேலை கோரி மனு 0 தமிழக தலைமை தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம் 0 சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்பப் பெற வேண்டும்: காஷ்மீர் எம்.பிக்கள் போராட்டம் 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி: 19- இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது! 0 முதல்வர் தலைமையில் நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்! 0 எடப்பாடி பழனிசாமி கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்: ரஜினிகாந்த் கேலி பேச்சு 0 பெண் பக்தரை கன்னத்தில் அறைந்த தீட்சிதர்! 0 தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 உச்ச நீதிமன்ற கொலீஜியத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி! 0 அயோத்தி வழக்கில் மேல்முறையீடு: இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து! 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0 கோத்தபய ராஜபக்ச வெற்றி முகம்: மாலையில் இறுதி அறிவிப்பு 0 நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமானதாக அமையும்: பிரதமர் நம்பிக்கை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியங்களுடன் கி.ரா – 29, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   15 , 2016  23:51:29 IST


Andhimazhai Image

28-8-96

 

புதுவை – 08

 

நண்பருக்கு நலம். உங்கள் 23-8-96 கடிதம். ‘சமாதிநிலை’ என்பது பொருத்தமான வார்த்தை. வேற வார்த்தை போடவும் முடியாது. அதை நோக்கித்தான் மனசு நகர்ந்து கொண்டிருக்கிறது. பற்று இல்லாமல்ப் போனதினால்தான்;

 

அதுக்குப் பிறகுவந்த எனது புத்தகங்களை நான் அனுப்ப மறந்தேனோ. “பெண்மனம்”,  “கி.ரா.வின் பதில்கள்”, “அந்தமான் நாயக்கர்”, “கி.ரா.கட்டுரைகள்”, இவை போக நாட்டுப்புறப்பாலியல்கள் இரண்டு தொகுப்புகள் இவைகளில் எதெல்லாம் உங்களை வந்தடைய வேண்டும் என்று தெரியவில்லை.

 

கடைசியில் சொன்ன இரண்டு தொகுப்புகளை(பாலியல் கதைகளை) நிறங்கள் படிக்க விரும்பிவீர்களா என்கிற தயக்கம் எனக்கு. “மறுவாசிப்பில்” புத்தகம் வித்தியாசமான வரவு. கி.ராவின் இன்னொருபக்கத்தை அடையாளம் காட்டும்.

 

புத்தகத்தின் கடைசியிலுள்ள நேர்காணல் பலரையும் புருவத்தை உயர்த்த வைத்திருக்கும். தாத்தாவின் விழா சிறப்பாக அமையும்.

 

ப.சிதம்பரத்துக்கு ஒரு கடிதம் எழுதினேன் தில்லிக்கு. ரசிகமணியின் உருவம் கொண்ட தபால்தலை கொண்டுவர வேண்டும் என்று.

 

வரலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எப்பவும் உங்கள்

 

(கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள்)



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...