???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியங்களுடன் கி.ரா – 21, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்

Posted : புதன்கிழமை,   செப்டம்பர்   07 , 2016  03:22:54 IST


Andhimazhai Image

இடைசெவல்

 

23.10.53

 

அன்பார்ந்த தம்பிமார்களே,

 

உங்கள் கடிதத்தைப் படித்துமுடித்த உடன் குற்றாலத்துக்கு ஒரே பாச்சலாய் பறந்து வரவேண்டுமென்று தோணுகிறது. விழா ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களைப் பார்க்கமுடியாது போல் இருக்கிறதே. நான் படுத்த படுக்கையில் இருக்கிறேன். 31ம் தேதிக்குள் கொஞ்சம் குணமாகிவிடாதா? வந்தால் இரண்டு நாளாது இருக்க வேண்டாமா? எனக்குக் கூட்டத்தைக் கண்டாலே நடுக்கம் வரும்! அந்த ‘நெறிபொறி’ யில் உங்களோடு நான் எங்கே ‘ஜிஞ்சாமிர்தமாய்’ இருக்கப்போகிறேன்?

 

உங்கள் தாத்தாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன். என் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டு நாளைக்குள் உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும் என நம்புகிறேன். நகல் எடுத்து அனுப்ப இப்போது இருக்கும் உடல் நிலையில் முடியாது. அசலையே அனுப்பி வைக்கிறேன். தயவு செய்து கூட்டத்தில் தவறவிடாமல், படித்து முடித்து தவறாமல் வைத்திருங்கள்.

 

முக்கியமாக தாத்தாவின் அபிப்ராயம்  அதைப்பற்றி தேவை. நான் எழுதும் முதல் கட்டுரை என்பதை மனதில் கொண்டு படிக்க வேண்டும்.

 

கட்டுரை, வெறும் வியாசமாக இல்லாமல் ஜீவனுள்ள பல அம்சங்களுள்ள ஒரு புது முறையில் எழுத முயன்றிருக்கிறேன். இது எனக்கு வெற்றி தந்தால் தாத்தாவைப்பற்றி ஒரு புஸ்தகம் எழுத முடியலாம். அவரைப்பற்றி ஏற்கனே ஒரு புத்தகம் (பா.தெண்டமான்) வெளிவந்திருக்கிறது. அதை நான் படித்ததில்லை. கிடைத்தால் தேவலை.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...