அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சாட்டையால உரிச்சிட்டாரு! - கி.ரா.பிரபி

Posted : வெள்ளிக்கிழமை,   ஜனவரி   01 , 2021  16:50:15 IST


Andhimazhai Image

அப்பாவைப் பார்க்க வீட்டுக்கு நிறையபேர் வந்து போய்ட்டுருப்பாங்க. அப்ப அவர் எவ்வளவு பெரிய ஆளுன்னு எனக்குத் தெரியாது.

ஒரு தடவ அவர் வெளியே போயிருந்தாரு. அப்ப ஒரு கையெழுத்துப் பிரதியா முடிக்கப்பட்ட நிலையில கோபல்ல கிராமம் நாவல் இருக்கு. அப்ப எனக்கு பதினாலு வயசு. அதைப் பிரிச்சு படிச்சுப் பாத்தேன். அப்பதான் எனக்கு புரிஞ்சுது எவ்வளவு அருமையாகவும் பிரமாதமாகவும் எழுதக்கூடியவர் அப்பான்னு. அதுல வர முத பாராவைப் படிச்சபோது எனக்கு அந்த வயசுல சிலுத்துப் போச்சு... எங்க அப்பாவை பெரிய எழுத்தாளர்னு உணர்ந்தது அந்த நிமிஷத்துலதான்.

நாங்க இடைசெவல் கிராமத்துல ஒரு சம்சாரி குடும்பங்கிறதால விவசாய வேலைகளைப் பார்த்துகிட்டே பள்ளிக்கூடமும் போய்கிட்டு இருந்தோம். எங்க அண்ணன் படிக்கல.. அதனால என்னையாவது எப்படியாவது படிக்க வெச்சுடணும்னு அவர் ரொம்ப விரும்பினாரு...

ஆனா எனக்கு அந்த வயசுல ரொம்ப சேட்டை... ஒரு நா பள்ளிக்கூடத்துலர்ந்து மதியானம் வீட்டுக்கு வந்தேன். வரும் வழியிலே ஒரு சம்சாரி இரண்டு மாட்டைக் TmiQmk கழுகுமலை மாட்டு சந்தைக்குப் போய்க்கிட்டிருந்தாரு.. எனக்கு அந்த மாட்டுச்சந்தைக்குப் போகணும்னு ரொம்ப ஆசை. அவர் கிட்ட நானும் வரேன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்தேன். அப்பா ஒக்காந்து பேட்ல வச்சு எதையோ எழுதிகிட்டு இருந்தாரு.. அவர்கிட்ட நான் கழுகுமலை மாட்டுச் சந்தைக்குப் போறேன்னுசொன்னேன். அவர் உர்ருனு என்னைப் பாத்தாரு.. நான் தொடந்து போவணும்னு அனத்துனேன்.. வீட்டுத் தொழுவத்துல ஒரு சாட்டை இருக்கும். அதப் போய் எடுத்தாந்து, என்னய கடும்கோபத்துல உரிச்சு எடுத்துட்டாரு.. நான் அழுதுட்டே ஊர் கோவில்ல போய் ஒக்காந்துட்டேன். அம்மா அப்புறமா வந்து என்னைத் தேடிட்டே கோயிலுக்கு வந்து நல்லபடியா பேசி, என்னை சாப்பிடஅழைச்சுட்டு போனாங்க. சாப்பிட உட்காந்தப்ப, புள்ளையை இப்படியா அடிக்கிறதுன்னு அப்பாகிட்ட  கோபமா பேசினாங்க. அப்பா அதையெல்லாம் கண்டுகிடல. என்கிட்ட, படிக்கிற வயதுல படிக்காம, மாட்டுச்சந்தைக்குப் போறேன்னு நிக்கறன்னு போதனை தான் பண்ணினார்..

சரி இவம் இப்படியே படிக்காம வீணா போய்டுவானோன்னு என்னைய ஹாஸ்டலில் சேத்து படிக்க வைக்கலாமுன்னு வீரவேலுசாமி மாமாகிட்ட பேசி, அவரு ஹாஸ்டல் வார்டன்... என்னை அழச்சிட்டு போனாங்க. போற வழியில கோவில்பட்டியில் இறங்கி சாப்பிடக் கூட்டிட்டுப் போயி, என்ன வேணும் சாப்பிடன்னு ரொம்ப பாசமா கேட்டாங்க. அது பரோட்டா, சால்னா அறிமுகமாகி மக்கள் ரொம்ப ஆவலா சாப்பிடற காலம். நானும் அது வேணும்னு கேட்டேன். வாங்கித்தந்தாங்க. அத்தோட கோழிக்கறின்னா பிரியமா சாப்பிடுவேன். அதையும் வாங்கிக் கொடுத்தாங்க. அவங்க சிம்பிளா எதையோ சாப்பிட்டுகிட்டாங்க. கொண்டுபோய் ஹாஸ்டலில் விட்டாங்க. அப்ப நமக்கு ஹாஸ்டலில் இருக்க முடியல.. பத்துநாளில் வீட்டுக்குப் போயிட்டேன்.

இவனை இப்படியே விட்டுட்டா சரிவரமாட்டான்னு வேம்பார்ல இருக்கிற ஒரு ஹாஸ்டலில் சேர்க்க அழைச்சுட்டுப்போனாங்க. அங்கே வெச்சி எனக்கு டே.. விவசாயம்லாம் அழிஞ்சிப்போச்சு. இனி அது இல்லாமலே போயிடும். நானும் உங்க அம்மாவும் வாயைக் கட்டி வயத்தை கட்டி ஏதோ ஓட்டிட்டோம். நீ படிச்சு ஏதோ வேலைக்குப் போய்ட்டீன்னா உனக்கு ரொம்ப நல்லதுன்னு சொன்னாங்க... இந்த போதனையெல்லாம் எனக்கு எங்க மண்டையில ஏறுச்சி. ஒரே வாரத்துல  வேம்பார்ல இருந்து நடந்தே ஊரப்பாக்க வந்துட்டேன். வர்ற வழியில விளாத்திகுளம் தாண்டி எட்டையபுரம் வழியில, லாரிக்காரர் ஒருத்தர் பாத்து என்னை அழைச்சுகிட்டு வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து கோவில்பட்டிக்கு பஸ் ஏத்திவிட்டாரு.. அவர் பேரு கோபால்சாமி நாயக்கரு... அப்பாவுக்குத் தெரிஞ்சவராம்.. நான் வீட்டுக்கு வந்து நடந்ததை சொன்னவுடனே.. அவன் ஏன் உன்னைய வீட்டுக்கு பஸ் ஏத்தி வுட்டான், திரும்ப வேம்பார்ல கொண்டுபோயில்ல விட்டுருக்கணும்னு ஆத்திரப்பட்டார்.

என்னை திரும்பவும் வேம்பார்ல ஹாஸ்டலில் விட்டாங்க. ஆனா நா திரும்ப ஓடிவந்துட்டேன். அத்தோட இவன் விதி இவ்வளவுதான்னு விட்டுட்டாங்க. நான் அம்மாகூட விவசாய வேலையெல்லாம் பாத்துகிட்டு இருந்துட்டேன். எனக்கு 29 வயது இருக்கும்போது அப்பாவை புதுச்சேரி பல்கலைக்கழகத்துல அழைச்சாங்க. எனக்கு கலியாணம் பண்ணி வெச்சுட்டு அவர் கிளம்பும்ப்போது,‘ஒன் விதி இப்படி ஆயிசுச்சு... பத்திரமா இருந்து பொழச்சுக்கன்னு சொல்லிட்டு கிளம்பினாரு..

அப்பாவுக்கு கல்யாணத்துக்கு முன்னமே காசநோய் இருந்துச்சு. அது குணமாகித்தான் அம்மாவ கல்யாணம் பண்ணி குழந்தைகள் பொறந்தோம். அப்ப எனக்கு ஏழுவயசு. எங்க அண்ணனுக்கு பதினோரு வயசு. அப்பாவுக்கு திரும்பவும் காசநோய் தாக்குதல் வந்துச்சு. அவர் மட்டும் தனியா மூணுமாசம் ஆந்திராவுல போய் சிகிச்சை எடுத்துகிட்டாரு. நாங்கள்லாம் யாரும் போகல. மூணுமாசம் கழிச்சு ஒருநாள் அவர் திரும்பி வாராரு. என்னையும் அண்ணனையும் அழைச்சுகிட்டு அம்மா கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசனுக்குப் போச்சு. அப்பாவ பாக்காம மூணுமாசமா பிரிஞ்சி இருந்த பிள்ளக நாங்க, ஆவலோட ரயில் வருதான்னு எட்டி எட்டி பாத்துகிட்டே இருந்தோம். ரயில் வந்து எங்களை தாண்டிப் போய் நின்னுச்சி. ஒவ்வொரு பெட்டியா பாத்தோம். எங்களைத் தாண்டிப் போய் நின்ன எட்டாவது பெட்டியிலிருந்து இறங்கி சிரிச்சிகிட்டே வர்றாரு. இங்கேந்து போனப்ப ஒல்லியா இருந்தவரு, இப்ப கொஞ்ச தளதளப்பா இருக்காரு.. அம்மாவ பாத்து கைகாட்டுனாரு.. நாங்க ஓடினோம். எங்களத் umiU கொடுத்து அணைச்சிகிட்டாரு... எங்களுக்கு முத்தம் கொடுக்க அவர் நினைச்சிருக்கலாம். ஆனா கொடுத்ததே இல்ல. ஏன்னா அவரு வியாதி ஒட்டிக்கிடுமோங்கற பயம்..

நா அவர் நெனச்சமாதிரி படிச்சு வேலைக்குப் போகலன்னு ஒரு வருத்தம் அவருக்கு இருந்திருக்கலாம். ஆனா இவந்தலையில எழுதுனது இவ்வளவுதான்னு அவர் தன்னய தேத்திகிட்டிருப்பாரு...
ஆனா இப்ப நான் எழுதறத படிச்சு கொஞ்சம் திருப்தி அடையறாரு... முந்தா நா கூட சொன்னாரு.. ‘உனக்கு அருமையா எழுதவருது... என்ன ஆனாலும் சரி எழுதிகிட்டே இருன்னு..

- கி.ரா.பிரபி, எழுத்தாளர் கி.ரா. அவர்களின் இளைய மகன்.

(அந்திமழை ஜனவரி 2021 சிறப்பிதழில் வெளியான கட்டுரை)

 



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...