???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வகுப்பறை வாசனை -10- கற்றது கல்வி மட்டுமல்ல... ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் 0 என் இனிய தயாரிப்பாளர்களே....!பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம்! 0 தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை!- முதல்வர் அறிவிப்பு 0 கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று 0 புதிய கல்வி கொள்கை: முதலமைச்சருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு 0 நாகை எம்.பி. செல்வராசுவுக்கு கொரோனா உறுதி 0 மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா 0 ஆளுநர் பன்வாரிலால் கொரோனா தொற்றால் பாதிப்பு 0 தமிழகத்தில் 5,875 பேருக்கு தொற்று பாதிப்பு 0 கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: முதலமைச்சர் 0 கொரோனா தாக்கம் 10 ஆண்டுகள் நீடிக்கும்: WHO 0 தமிழகத்தின் எதிர்காலத்துக்கு அ.தி.மு.க துரோகம்: ஸ்டாலின் 0 அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம்: மு.க.ஸ்டாலின் 0 கொரோனா மருந்தை கள்ளச்சந்தையில் விற்று செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதா? - வைகோ கண்டனம் 0 ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்தன
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பிரியங்களுடன் கி.ரா – 28, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்

Posted : புதன்கிழமை,   நவம்பர்   09 , 2016  00:37:56 IST


Andhimazhai Image

4.12.86

33/9, C.P.W.D.குவாட்டர்ஸ்

கே.கே.நகர், சென்னை – 78

 

பிரியம் நிறைந்த நண்பர் அவர்களுக்கு

 

வணக்கம்.

 

முகவரியைப் பார்த்து திகைக்க வேண்டாம். இப்போது காயிதம் இடைசெவிலிலிருந்துதான் எழுதுகிறேன். சனிக்கிழமை 6ம் தேதி மாலை நெல்லை எக்ஸ்பிரஸில் கணவதியுடன் இந்த முகவரியில் தங்கியிருக்கப் போகிறோம்.

 

ஊரில் விவசாயம் கிடையாது. அதோடு இந்த வருஷம் மழையும் இல்லை. இனிபெய்து புரோஜனமும் இல்லை. பிரபு இப்போதைக்கு கோவையில் இருக்கிறான். ஒரு ரண்டு மூனுமாசம் மெட்ராஸில் இருக்கலாம் என்று நினைத்துப் புரப்படுகிறோம்.

 

“மெட்ராஸ் காற்று” ஒத்துக்கொள்ளவில்லை என்று தெரிந்தால் பாதியிலேயே திரும்பி வந்தாலும் வந்துவிடுவோம். ஒரு வேளை மெட்ராஸ் வாசியாகவே ஆனாலும் ஆகிவிடும்வோம். எதுவும் நம்கையில் இல்லை.

 

மெட்ராஸில் யாரோடும் தொடர்பு கொள்ளாமல் யாரையும் பார்க்காமல் இருந்து கொண்டு முதல்க்காரியமாக “ரண்டாம்பாகம்” நாவலை எழுதி முடிக்க விருப்பம். எங்கே போய் உட்கார்ந்தாலும் இடைசெவல்க்காரனாக இருக்க முடிந்தால்தான் எனக்கு எதுவும் ஓடும். எப்படி என்று பார்ப்போம்.

 

64 ஆண்டுகள் இந்த ஊரில் இருந்துவிட்டேன். இன்னொரு இடத்தில்ப் போய் வேர்விடுவது என்பது லேசுபட்ட காரியமில்லை. ஆனாலும் என்னை எதுவோ, போ என்று சொல்லுகிறது; கிளம்பிவிட்டேன்.

 

பிரபுவை சென்னையில் காலூன்ற வைக்கத்திட்டம். நான் ஏற்கனவே உங்களிடம் சொன்ன அந்த மானேஜர் (ஸ்டேட்பாங்க்) ராமமூர்த்தியும் அவரது பிரியமுள்ள மனைவி பாரதியும் செய்துள்ள ஏற்பாடுகள்தான் இவையெல்லாம். நாம் சந்திக்க நேரும்போது இவைபற்றியெல்லாம் விபரமாகப் பேசலாம். இப்போதைக்கு விடை தாருங்கள்.

 

எப்பவும் உங்கள்

 

பின்பக்கம் திருமதி முத்தம்மா அண்ணிக்கு ஒரு மருந்து எழுதப்பட்டிருக்கிறது; இது திருமதி கணவதி அம்மா விசாரித்து சேகரித்த விஷயம். இதையும் செய்து பாருங்கள்.

 

குன்னிமுத்து இலைகளைப் பறித்துக்கொண்டுவந்து, 11வயசுக்கு உட்பட்ட ஆண்குழந்தையின் சிறுநீர் விட்டு இடித்து 250 மில்லிகிராம் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ளவேண்டும். சுத்தமான சிமெண்ட தரையில், புளியமரப்பட்டை மேலுள்ள சிராய்ச்சிசில்லுகளை சேகரித்து அதோடு காய்ந்த தேங்காய் நார் கலந்து தரையில் பரப்பி தீ மூட்டவேண்டும்.

 

 

புளியமரப்பட்டைச்சில்லுகளும் தேங்காய் நாரும் எரிந்து தணல் தணியும் வேளையில் எரிந்தவட்டத்தின் நடுவில் தணலையும் சாம்பலையும் விலக்கி (கொஞ்சம் தரை தெரியும்படியாக) அந்தப் பள்ளத்தில் சிறுநீர்கலந்த குன்னிமுத்து இலையின் சாற்றைவிட, கொதித்து அடங்கும்.

 

இளஞ்சூட்டோடு சாற்றையும் – கலந்த சாம்பலோடு – வலிக்கும் இடங்களில் பூசி, 10 மணி நேரங்கழித்து சுத்தப்படுத்திக்கொள்ளலாம். இப்படி நான்கு அல்லது ஐந்து தினங்கள் செய்துவர வலிநீங்கி, குணம் தரும்.

 

பெண்களுக்கு ஆண்குழந்தையின் சிறுநீர்; ஆண்களுக்கு பெண்குழந்தையின் சிறுநீர்;

இது மட்டுமே மாறும்.

 

(கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள்)

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...