???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐந்து லட்சமும் திமுக காரர்களுக்கேவா?

Posted : சனிக்கிழமை,   ஜனவரி   18 , 2020  03:09:17 IST


Andhimazhai Image


கிண்டில் 2020 பென் டு பப்ளிஷ் போட்டி முடிவுகளில் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான படைப்புகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. எஸ் எஸ் சிவசங்கர் டான் அசோக் குரு புருனோ சென் பாலன் குணசீலன். ஆகியோரின் படைப்புகள்தான் தேர்வாகி உள்ளன. இந்த பெயர்களைப் பார்த்ததும் பழைய படி சர்ச்சை தொடங்கிவிட்டது. ஏற்கெனவே இந்த போட்டியை திமுக காரர்கள் கைவசப்படுத்திவிட்டனர் என்ற சர்ச்சை கிளம்பி இருந்தது. இப்போது இரண்டாம் சுற்றுக்குத் தேர்வானவர்களின் பெயர்களைப் பார்த்ததும் தன் குற்றச்சாட்டு நிஜமாகி விட்டது என்கிறார் எழுத்தாளர் ஹரன் பிரசன்னா.

 

தன் முகநூலில்," என்னைத் திட்டித் தீர்த்தார்கள். கிண்டில் 2020 தேர்தெடுக்கப்பட்ட ஐந்து நீள்வடிவப் படைப்புகளை எழுதியவர்களின் பெயர்கள்: எஸ் எஸ் சிவசங்கர் டான் அசோக் குரு புருனோ சென் பாலன் குணசீலன். ரூஹ் என்ற நாவலை எழுதிய லஷ்மி சரவணக்குமார்? அதைப் பத்தி யாருக்கென்ன?” என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

 

இதற்கு நீண்ட பதில் தந்துள்ளார் எழுத்தாளரும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர். இவர் எழுதி உள்ள தோழர் சோழன் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகி உள்ளது.
 

தோழர் ஹரன் பிரசன்னா" அவர்களுக்கு என்று குறிப்பிட்டு அவர் எழுதி உள்ள பதில் இது:

“அமேசான் 'pen to publish' போட்டி குறித்து தாங்கள் எழுதியுள்ள கருத்துகள் 100 சதவிகிதம் சரி. எழுத்தின் தரம் குறித்துக் கணக்கில் கொள்ளாமல் விற்பனை, விமர்சனம், படிக்கப்பட்டுள்ள பக்கங்களை கணக்கில் கொண்டு அமேசான் முதல் சுற்று வெற்றியை அறிவிப்பதாக அறிகிறேன்.
 

ஆனால் இன்னொன்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். அமேசான் இந்தப் போட்டியை நடத்துவதே, "அமேசான் கிண்டிலை" பிரபலப்படுத்திக் கொள்ளத் தான். அதனால் அவர்கள் விறபனையை தான் குறி வைப்பார்கள்.
 

தங்கள் நூல் விற்பனையாக வேண்டும் என்பதும், அதன் மூலம் முதல் சுற்றில் நுழைய வேண்டும் என்பதும் நூல் எழுதியவர்களின் விருப்பமாக இருக்கும். அப்படி இருந்தால் தான் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
 

அதனால் விற்பனை அதிகரிக்க, நூல் எழுதியவர்கள் தாங்கள் நூல் எழுதியதை விளம்பரப்படுத்துவது தவிர்க்க இயலாதது. அப்படி வெளியில் சொல்லா விட்டால், புதிய எழுத்தாளர்கள் நூல் எழுதியதே தெரியாமல் போய் விடும்.
 

விளம்பரத்தை கண்டு, புத்தகத்தை வாங்கும் புதியவர்கள் அமேசானில் இருக்கும் மற்ற புத்தகங்களை வாங்குவார்கள் என்பது அமேசானின் வியாபார கணக்கு.
 

அமேசான் pen to publish, கிட்டத்தட்ட பபாசியின் புத்தகக் கண்காட்சி போல தான். அரங்குக்கு வெளியே வைக்கப்படும் பேனர்கள், பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் செய்திகள் போல தான் , நூல் எழுதியவர்கள் முகநூலில் விளம்பரப் படுத்திக் கொண்டது.
 

என்ன தான் மணிரத்தினம் படமாக இருந்தாலும், புதிய இயக்குனர் படமாக இருந்தாலும் விளம்பரம் தவிர்க்க இயலாதது. அப்ப தான் படம் ஓடும், இல்லன்னா பப்படம் தான்.உலகம் சுற்றும் மோடியாக இருந்தாலும், உள்ளூரில் ஓட்டு கேட்டு தான் ஆக வேண்டும். ஃபேக் அய்டி வைத்து முகநூலில் எதிராளிகளை ட்ரோல் செய்து தான் ஆக வேண்டும். ஷாங்காய் பேருந்து நிலையத்தை சூரத் பேருந்து நிலையம் என போட்டோ ஷாப் செய்து தான் ஆக வேண்டும். மார்க்கெட்டிங் அவசியம்.


அதனால் உங்களை சங்கடப்படுத்தும் 'புத்தக மார்க்கெட்டிங்' என்பது தவிர்க்க இயலாதது. நீங்கள் விருப்பப்படும், நீங்கள் தரமான எழுத்து என நம்புபவைகளுக்கு, 'சாகித்ய அகாடமி' போன்ற பரிசுகள் உள்ளன. அது அவர்களுக்கு, அமேசான் இவர்களுக்கு.
 

அடுத்து உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நான் எழுதிய புத்தகம் அமேசான் போட்டிக்கு வருகிறதென்றவுடன் நீங்கள் அடித்த கமெண்ட் , என் நூலுக்கு சிறந்த விளம்பரமாக அமைந்தது. இவர் விமர்சிக்கிறாரென்றால் அப்படி என்ன தான் இருக்கிறதென பார்ப்போமென முனிரத்தினம் சுந்தரமூர்த்தி போன்றவர்கள் வரவேற்பு கொடுத்தார்கள். அது நூறு நூல்கள் விற்பனையை கொண்டு வந்து சேர்த்திருக்கும்.’’ இப்படிச் செல்கிறது அவர் எழுதி இருக்கும் பதில்.
 

“திராவிடம் தேர்தலில் வென்றால் Booth capture என்கிறார்கள்.  இலக்கியத்தில் வென்றால் Amazon hacking என்கிறார்கள். இவர்கள் கடைசி வரை மக்களை மட்டும் புரிந்து கொள்ளப் போவதேயில்லை!  நமக்கும் அது தான் நல்லது,” என்று சொல்லி இருக்கிறார் திராவிட ஆதரவு எழுத்தாளர்களை இந்த போட்டியில் கலந்துகொள்ள ஊக்குவித்த ரவிசங்கர் அய்யாக்கண்ணு. “அமேசான் கிண்டில் போட்டியில், ஆங்கிலம், இந்தியில் இறுதிப் போட்டிக்கு வந்துள்ள நூல்களுக்கு எத்தனை கருத்துரைகள் பாருங்கள். தமிழுக்கு எத்தனை என்று ஒப்பிடுங்கள்.தமிழில் போட்டியிட்டவர்கள் தான் உண்மையிலேயே பாவம். மிகக் கடுமையான போட்டி. நூற்றுக்கணக்கான நூல்களை விற்று, கருத்துரைகளைப் பெற்றால் தான் இறுதிச் சுற்றுக்குப் போக முடியும்.இப்படி, வாசிப்பையும் எழுத்தையும் ஜனநாயகப்படுத்தி, கடுமையான போட்டியில் தங்கள் திறமையை நிறுவி வருகிறவர்களைத் தான், ஊழல் செய்து விட்டார்கள், Amazonஐ hack செய்து விட்டார்கள், கும்பலாகச் சேர்ந்து செயலாற்றுகிறார்கள் என்று தூற்றுகிறார்கள். கடைசி வரை நமக்கும் திறமை உண்டு என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். இதே விமர்சனம் தான் தேர்தல் அரசியலிலும் கல்வியிலும் நம் மீது வைக்கப்படுகிறது. உயிரைக் கொடுத்து 200க்கு 200 மதிப்பெண் பெற்றால் கல்வித் திட்டம் தரம் இல்லை என்பார்கள். தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றினால் சினிமாக்கார தலைவர்கள் என்பார்கள். உங்களுக்கு எல்லாம் நல்ல சாவே வராதுடா!’’ என்று சீறி இருக்கிறார் அவர்.
 

ஒரு போட்டியை ஒரே சார்பான ஆட்கள் நுழைந்து கைப்பற்றி வெல்வது என்பது பிற  கருத்தாளர்களை மனம் நோக வைக்கும் என்பது உண்மைதான்.  சண்டை என்று வந்துவிட்டால் சட்டைகள் கிழிவது சகஜம்தானே? பார்க்கலாம். நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் இறுதிப் படைப்பு என்னவென்று?

-வாசுகிclick here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...