???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மழைநீர் வடிகால் திட்டம்: அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவு 0 தேனி, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு 0 கர்நாடகாவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! 0 உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் வெளியானது! 0 கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சூர்யா! 0 குல்புஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்குத் தடை 0 கும்பகோணத்தில் மாட்டுக்கறி விழாவுக்கு அழைப்பு விடுத்தவர் கைது! 0 சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வருவார்: டி.டி.வி.தினகரன் 0 மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி ஹபிஸ் சயித் பாகிஸ்தானில் கைது! 0 வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதிநாள்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம் 0 குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு 0 வட தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் 0 தபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது: ஸ்டாலின் 0 நீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடி அகழாய்வில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுன்   25 , 2019  22:58:39 IST

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் தமிழக தொல்லியல் துறை மூலம் 5-ம் கட்ட அகழாய்வில் பழங்கால இரட்டைச்சுவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த 13-ம் தேதி தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் 5-ம் கட்ட அகழாய்வை தொடங்கிவைத்தார்.

முதல் கட்டமாக நான்கு குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த நான்கு கட்ட அகழாய்விலும் 12 மீட்டர் ஆழத்திற்கு பின்தான் பொருட்கள் கிடைக்க ஆரம்பித்தன. ஆனால் தற்போது 5-ம் கட்ட அகழாய்வில் 5 மீட்டர் ஆழத்திலேயே மண் ஓடுகள், மண் பானைகள், அழகு பானைகள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளன.

முருகேசன் என்பவரது நிலத்தில் நான்கு குழிகள் தோண்டும் பணி நேற்று காலை தொடங்கியது. இரண்டு அடி ஆழத்திலேயே பழங்கால சுவர் தென்பட ஆரம்பித்ததும் தொழிலாளர்கள் கவனத்துடன் தோண்டியுள்ளனர்.

அப்போது நீண்ட சுவருக்கு பக்கத்தில் பாதியளவு சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு சுவர்களிலும் இரண்டு அடி நீளமும், ஒரு அடி அகலமும் 15 செ.மீ உயரமும் கொண்ட செங்கற்கள் உள்ளன.

நல்ல நிறத்துடனும் உறுதிதன்மையும் கொண்ட இச்செங்கற்கள் வரிசையாக இல்லாமல் ஒன்றன் மேல் ஒன்றாக சரிவான வகையில் அடுக்கி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என கண்டறியமுடியவில்லை.

கட்டிடத்தின் அடிப்புறம் வரை தோண்டியபின்தான் உறுதியாக சொல்ல முடியும், இந்த சுவர் கட்டிடத்தின் முழு படிவமும் கிடைத்தால், இதில் யாரும் வாழ்ந்திருந்த அடையாளம் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த நான்கு கட்ட அகழாய்வில் கட்டிட சுவர்கள் சிதிலமடைந்து கிடைத்த நிலையில் இதில் சுவர் முழுமையாக இருப்பதால் முழு கட்டிடமும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே தொல்லியல் துறையினர் கவனமுடன் அகழாய்வை தொடர்ந்து செய்கின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...