???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல் 0 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட சிம்பு குழுவுக்கு பாராட்டு! 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி!

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   18 , 2018  23:08:38 IST

சிவகங்கை மாவட்டம் கீழடியில் மூன்று கட்டமாக மத்திய தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது. 4-ம் கட்ட அகழாய்வை மத்திய தொல்லியல் துறை நடத்தாத நிலையில், 47 கோடி ரூபாய் செலவில் தமிழக தொல்லியல் துறை நடத்தி வருகிறது.
 
இந்த ஆய்வின் ஒரு பகுதியாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. அவை கால்நடைகள் மற்றும் மனிதர்களுடையதாக இருக்கலாம் என்று கூறியுள்ள அதிகாரிகள், அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
மூன்று கட்ட ஆய்வில் வர்த்தகம் வாழ்வியல் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், மனிதன் வாழ்ந்தது தொடர்பான ஆதாரத்திற்காகவே நான்காம் கட்ட ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன் பலனாக எலும்புகள் கிடைத்திருப்பதால், கீழடியில் தொடர்ந்து ஆய்வு நடத்த வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
 
இந்நிலையில், 5-ம் கட்ட அகழாய்வை நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி அளித்துள்ளது. இதையும், தமிழக தொல்லியல் துறை நடத்துவதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...