???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்! 0 நாமக்கலில் சாலை விபத்து: குழந்தை உள்பட 5 பேர் உயிரிழப்பு! 0 கார்ப்பரேட் வரி குறைப்பு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: மோடி 0 வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மூன்று நாட்களுக்கு மழை! 0 பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ரூ.1½ லட்சம் கோடி வரிச்சலுகை: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு 0 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம் 0 நெல்லையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை 0 சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய சட்டம்: மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் 0 கீழடி ஆய்வறிக்கை: அமைச்சர் பாண்டியராஜனுக்கு ஸ்டாலின் பாராட்டு 0 தஹில் ரமானியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார் குடியரசு தலைவர் 0 பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக தலைவர் சின்மயானந்தா கைது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பால் விலையை உயர்த்தாமல் - மது விலையை உயர்த்தினால் வருமானம் கூடுமே!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   20 , 2019  05:16:46 IST


Andhimazhai Image
மது விலையை உயர்த்தி, பால் விலை உயர்வை ரத்து செய்து, உற்பத்தியாளர் நலன் - உரிமை - நுகர்வோர் உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டியது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
 
இதுதொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 
"ஆவின் பால் விலையை திடீரென்று லிட்டருக்கு 6 ரூபாய் விலை உயர்த்துவதாக ஆவின் பால் நிர்வாகம் அறிவித்துள்ளது - சாதாரண ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினரை மிகப்பெரிய அளவில் பாதிக்கும்.
 
மறுபரிசீலனை செய்க!
 
பால் ஊட்டச் சத்துணவு; ஏழை, எளிய தொழிலாளர்கள், வீட்டவர்களுக்கு காபி, டீ அருந்துதல் தவிர்க்க முடியாத அன்றாடப் பழக்கமாகிவிட்ட நிலையில், பால், முட்டை போன்றவைகளின் விலைகளை தமிழக அரசு உயர்த்தி, மக்களின் - குடும்பத் தலைவிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல், தவிர்க்கவேண்டும் - மறுபரிசீலனை செய்யவேண்டும்!
 
மாட்டுத் தீவனங்கள் விலை உயர்வு, இடுபொருட்கள் விலை உயர்வால், பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுப்படியான விலையைத் தரவேண்டாமா? என்ற கேள்வி எழலாம்.
 
அது மக்கள் நல அரசில் பல இலவசத் திட்டங்கள் தருவதைக் கூட குறைத்து, இவர்களுக்கு விலைக் குறைத்து, உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையைக் கூட்டி, மானியம் (Subsidy)
போன்ற உதவித் தொகை தருவதுபோல தரலாமே!
 
மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைக்கலாம்!
 
பால் விலையை ஏற்றாமல், டாஸ்மாக்கில் குடிகாரர்களுக்கு விற்கப்படும் போதை மது வகைகளுக்கு விலை ஏற்றலாம்; அத்தொகை கூடுதல் வருமானம். அதிக விலை என்பதால், டாஸ்மாக் குடிகாரர்களின் கொள்முதல் குறைந்து, குடிப்பவர்கள் அளவும் குறைந்தால், அவர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி ஆரோக்கியமானது அல்லவா! 
 
‘குடி குடியைக் கெடுக்கும்‘ என்று போர்டு எழுதி வைப்பது ஒரு சடங்காச்சார சங்கதி.
 
எனவே, மது விலையை உயர்த்தி, பால் விலையைக் குறைத்து - உற்பத்தியாளர் நலன் - உரிமை - நுகர்வோர் நலன் - உரிமையைப் பாதுகாக்க தமிழக அரசு முன்வரவேண்டியது அவசியம்!". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary
Ki Veeramani urge Raise alcohol price

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...