???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மொழித்திமிர் காட்டிய அதிகாரி இந்தி பூமிக்கு மாற்றப்பட வேண்டும்: ராமதாஸ் 0 மக்களைக் காக்க வேண்டிய அரசு கொல்லும் அரசாக மாறிவிட்டது: மு.க.ஸ்டாலின் 0 இடைநீக்கத்தை ரத்து செய்யும் வரை நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு 0 நவம்பர் முதல் வாரம் கல்லூரிகள் திறப்பு 0 மாணவர் சேர்க்கை தகவல்களை அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை 0 வேளாண் மசோதாவுக்கு எதிராக பேசிய அதிமுக எம்.பி.யிடம் விளக்கம் கேட்கப்படும்: முதலமைச்சர் 0 அண்ணா பல்கலைக்கழக பெயர்மாற்றம்: வழக்கு தொடர பேராசிரியர்கள் முடிவு 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

விண்வெளி விஞ்ஞானிகளின் அரிய முயற்சி வெற்றி வாகை சூடி உள்ளது - கி.வீரமணி வாழ்த்து

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   23 , 2019  04:31:10 IST


Andhimazhai Image
இதுவரை ஆய்வு செய்யப்படாத சந்திரன் பகுதியில் ஆய்வு செய்திட வெற்றிகரமாக சந்திராயனை ஏவிய விஞ்ஞானிகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
"சிறீஅரிகோட்டா என்ற ஆந்திரப் பிரதேச பகுதியில் நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் அரிய முயற்சி வெற்றி வாகை சூடி உள்ளது! சந்திராயன் என்ற நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் அறிவியல் சாதனை சரித்திர சாதனையாகி, உலகத்தை வியக்கச் செய்திருக்கிறது!
 
பாராட்டுக்குரிய தமிழரான விஞ்ஞானி தலைமையில் சாதனை!
 
தமிழ்நாட்டுத் தமிழரான விஞ்ஞானி பெருமைமிகு சிவன் அவர்களது தலைமையிலான குழுவினர் இவ்வரிய முயற்சியில் சாதனை படைத்துள்ளனர் என்பது பெருமகிழ்ச்சிக்கும், பாராட்டுதலுக்கும் உரியதாகும்.
சுமார் 1000 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள சந்திராயன்II மிக வெற்றிகரமான சோதனையாக அமைந்துள்ளது.
 
இதன் பாகங்கள் பெரிதும் உள்நாட்டிலேயே கிடைக்கும் கருவிகள் - பொருள்கள்மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமது பெருமைக்குரிய தமிழர்தம் பெருமைமிகு விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தது மிகவும் பூரிப்புக்குரிய ஒன்று!
 
இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் பகுதியில் புதிய ஆய்வு
 
முதலில் சிறிது தடங்கல் ஏற்பட்டாலும்கூட, அதனால் ஊக்கம் இழந்துவிடாமல், உடனடியாக அதை சரி செய்து, எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே அதை ஏவியுள்ளதும் - அதுவும் இதுவரை யாரும் ஆய்வு செய்யாத நிலவின் தென் துருவப் பகுதியைக் குறி வைத்து ஆய்வு செய்து, தண்ணீர் உள்ளதா என்று கண்டறிவதும் எதிர்கால மானுட வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுவதாகும்.
 
புராணத்தில் விஞ்ஞானத்தைத் தேடவேண்டாம்!
 
இத்தகைய சாதனைகளைப் பெருக்கும்போது, நம்முடைய அறிவு, ஆராய்ச்சி, முயற்சிகள் காலத்தின்  முன்னோக்கியதாகவும், எதிர்காலம் ஒளிமிக்கதாக அமையவேண்டும் என்பதாகவும் இருக்கவேண்டுமே தவிர, பின்னோக்கி புராணங்களில் விஞ்ஞானத்தைத் தேடிடும் விபரீத முயற்சிகளாகவே அமைந்துவிடக் கூடாது. அது அசல் கேலிக் கூத்தாகவே முடியும்! நமது விஞ்ஞானிகளின் - பெண்களின் கூட்டு முயற்சியின் சிறப்பான வெற்றியாக இது பரிமளித்துள்ளது! 
 
இதில் ஈடுபட்ட அனைவருக்கும் நமது உள்ளம் நிறைந்த வாழ்த்துகள்!
 
முயற்சி திருவினையாக்கும்! ‘‘நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!’’. இவ்வாறு கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

English Summary
Ki. Veeramani Congrats isro

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...