???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தென்கொரியாவில் பரவும் கொரோனா வைரஸ்; 556 பேருக்கு பாதிப்பு! 0 அரசியலமைப்பையும் கல்வியையும் பாதுகாக்கும் கடமை மாணவர்களுக்கு உண்டு: ஆய்ஷி கோஷ் 0 சந்தனக் கடத்தல் வீரப்பனின் மகள் பாஜகவில் இணைந்தார்! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ரஜினி கடிதம் 0 பிரதமரை புகழ்ந்து பேசிய நீதிபதிக்கு வலுக்கும் கண்டனம் 0 'உத்திர பிரதேசத்தில் தங்க சுரங்கம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை' 0 பிரதமர் மோடி பன்முகத்திறன் கொண்ட அறிவாளி: உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா 0 டிரம்பின் வருகை அமெரிக்க தேர்தல் பிரசாரமாக இருக்கக்கூடாது: காங்கிரஸ் 0 இலங்கையில் ‘பர்தா’ அணிய தடை: நாடாளுமன்ற குழு சிபாரிசு 0 ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் 0 ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி 0 வாணியம்பாடி திமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் 0 கீழடி அருங்காட்சியகம்: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு! 0 சிறுபான்மையினருக்கு எப்போதும் அரணாக இருப்போம்: அதிமுக அறிக்கை 0 பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவி கைது
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சுவர் ஏறிக் குதித்து ப. சிதம்பரத்தை சி.பி.ஐ கைது செய்தது நாகரிகமா? அரசியல் வன்மமா?

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  04:13:54 IST


Andhimazhai Image
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை  தீவிரவாதிபோல் சுவர் ஏறிக்  குதித்து சி.பி.ஐ கைது செய்திருக்கும் அணுகுமுறைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
 
"அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரும், மேனாள் மத்திய உள்துறை மற்றும் நிதியமைச்சரும், இந்நாள் மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினரில் முன்னணி விமர்சகர்களில் ஒருவருமான மூத்த வழக்குரைஞர் திரு.ப.சிதம்பரம் அவர்கள்மீது பா.ஜ.க. அரசு வழக்குகள் தொடுத்துள்ளது சி.பி.அய்.மூலம்.
 
சில வழக்குகளில் அவர் விசாரணைக்குச் சென்று, அவரைக் கைது செய்யக்கூடாது என்று பலமுறை அவகாசமும் கொடுத்து, வழக்கு விசாரணை தொடர்ந்தது. ஒரு குறிப்பிட்ட வழக்கில் டில்லி உயர்நீதிமன்றத்தால் அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது நேற்று முன்தினம். 
 
அவர் மறுசீராய்வு மனுவை  தனது வழக்குரைஞரின்மூலம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து, உடனடியாக அது விசாரணைக்கு வராமல், வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. 
 
இடையில் ஒரு நாள் இருக்கும் நிலையில், ‘‘அவர் தலைமறைவு - தேடப்படும் குற்றவாளி’’ என்று அவரது இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
 
அவர் ஓடி ஒளியவோ, தலைமறைவாகவோ இல்லை; நேற்று (21.8.2019) மாலை புதுடில்லி அகில இந்திய காங்கிரஸ் அலுவலகத்தில், ‘‘வழக்குரைஞர்களுடன் அடுத்த கட்ட சட்டபூர்வ பரிகார நடவடிக்கைகளுக்கான ஆலோசனைப்  பணியில் ஈடுபட்டிருந்தேன். சட்டத்தை மதிப்பவன் நான்’’ என்று ஒரு அறிக்கையை வாசித்தார். பிறகு வீடு திரும்பிய நிலையில், சி.பி.அய். தொடர்ந்து சென்று அவரைக் கைது செய்தது.
 
சி.பி.அய். அதிகாரிகளுக்குக் கடமையை நிறைவேற்றிடும் பொறுப்பு உண்டு என்றாலும், இரவில் அவருடைய வீட்டின் சுவர் ஏறிக் குதித்து, சிதம்பரம் ஏதோ ஒரு பயங்கரவாதி, தீவிரவாதி, சமூக விரோதி என்ற தோற்றத்தை உருவாக்குவதுபோல நடந்துகொண்டதை, நடுநிலையாளர்களும், ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எந்த மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
சட்டம் தன் கடமையைச் செய்வதில் அரசியல் வன்மமோ, காழ்ப்புணர்வோ அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டுவதுபோல நடந்திருப்பது நியாயமானதல்ல.
 
அவரை மட்டும் அச்சுறுத்துவதற்காக அல்ல!
 
இது அவரை மாத்திரம் அச்சுறுத்த அல்ல - அரசின் கொள்கைகளை, திட்டங்களை விமர்சிக்கும் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு முறையாகவும் கையாளப்படுகிறது.
 
இதை ஜனநாயகவாதிகளும், அரசியல் சட்ட மாண்புகளை மதிப்போர்களும் ஒருபோதும் வரவேற்கமாட்டார்கள். ஜனநாயகம் - கருத்துரிமையின் குரல்வளை நெரிக்கப்படக் கூடாது!
 
சிறந்த சட்ட நிபுணரும், வழக்குரைஞருமான நண்பர் சிதம்பரம் அவர்கள் சட்டப்படி இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வார் என்பது உறுதி!". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

English Summary
Ki. veeramani condemned p. chidambaram arrest

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...