அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்! 0 நாகலாந்து துப்பாக்கிச் சூடு: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை! 0 நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி! 0 கோவை வேளாண். பல்கலையில் 80% பேர் தோல்வி; மாணவர்கள் போராட்டம்! 0 நாகலாந்து: தீவிரவாதிகள் என நினைத்து ராணுவம் தாக்குதல் 13 அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை! 0 ரஷ்ய அதிபர் புதின் இன்று டெல்லி வருகை 0 ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21-ஆக உயர்வு 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்: டிடிவி தினகரன் விளக்கம் 0 எடப்பாடி பழனிசாமி கார் மீது தாக்குதல்! 0 கன்னத்தில் அறைந்தார்: நடிகர் விஜய்சேதுபதி மீது புதிய வழக்கு! 0 போராடும் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்த அமித்ஷா! 0 தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! 0 சென்னையில் தக்காளி விலை ரூ.90 வரை விற்பனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

விஜய் சேதுபதியை தாக்க முயன்ற கேரள இளைஞர் கைது

Posted : சனிக்கிழமை,   நவம்பர்   06 , 2021  10:57:50 IST

நடிகர் விஜய் சேதுபதி நேற்று முன்தினம் பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து விமானத்தில் சென்றார்.
 
விமான நிலையத்தில் அவரும், உதவியாளரும் சென்றபோது, இளைஞர் ஒருவர் திடீரென அவரை தாக்க முயன்றார். உடனே விஜய் சேதுபதியின் பாதுகாவலர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் அந்த வாலிபரை பாய்ந்து சென்று பிடித்தனர்.
 
பின்னர் அவர்கள் விஜய் சேதுபதியை அங்கிருந்து மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற இளைஞரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.
 
அவர் போலீசாரிடம் கூறும்போது, விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை கண்டதும் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பியதாகவும், தான் குடிபோதையில் இருந்ததால், அதற்கு உதவியாளர் மறுத்ததாகவும் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் விஜய்சேதுபதியின் உதவியாளரை தாக்க முயன்றதாகவும் கூறினார்.
 
மேலும் அந்த இளைஞர் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.
 
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ காட்சிகளை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். சிறிது நேரத்தில் அந்த வீடியோ வைரலானது. அதனை பார்த்தவர்கள் விஜய் சேதுபதியை இளைஞர் தாக்கியது ஏன்? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்றும் கேள்விகள் எழுப்பினர்.
 
இதற்கிடையே நடிகர் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் இளைஞர் தாக்க முயன்ற வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க பெங்களூரு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
 
அதன்படி பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் விஜய் சேதுபதியை தாக்க முயன்ற இளைஞரை கண்டுபிடித்தனர். அவர் கேரளாவைச் சேர்ந்த ஜான்சன் என தெரியவந்தது. தற்போது பெங்களூருவில் வசித்து வரும் ஜான்சன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...