???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 '7 பேர் விடுதலை தொடர்பாக கவர்னர் நல்ல முடிவை எடுப்பார்': முதல்வர் பழனிசாமி நம்பிக்கை 0 'குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும்': அமைச்சர் 0 என்னை ஒழித்துகட்ட முயற்சி: நடிகை சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார் 0 திருப்பூரில் லாரி - பேருந்து மோதி விபத்து: 13 பேர் பலி 0 இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு 0 பா.ஜ.க எம்.எல்.ஏ மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு 0 எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம்: சர்ச்சை! 0 திட்டமிட்டபடி சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும்: இஸ்லாமிய அமைப்புகள் 0 கர்நாடக பா.ஜ.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டம்! 0 தயாரிப்பாளர்களுக்கு செலவு வைக்கிறார் நயன்தாரா: தயாரிப்பாளர் புகார்! 0 சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அரசு முடிவு 0 கொரோனா வைரஸ்: பலி எண்ணிக்கை 2000ஐ தொட்டது! 0 மகாராஷ்டிராவில் NPR அமல்படுத்தப்படும்: உத்தவ் தாக்கரே 0 சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் தடை! 0 "மாதவிடாய் காலத்தில் சமைக்கும் பெண்கள் நாயாகப் பிறப்பார்கள்"
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்!

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   19 , 2020  19:54:04 IST

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த அஞ்சுவுக்கு, 2 சகோதரிகளும் உண்டு. கணவரை இழந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த அஞ்சுவின் தாய் பிந்து தனது மகள் திருமணத்திற்கு நிதி உதவி செய்ய வேண்டும் என, செருவல்லி பகுதியில் உள்ள மசூதி நிர்வாகத்தை நாடியுள்ளார். அதனை பரிசீலித்த மசூதி நிர்வாகம், நிதி உதவி செய்ய சம்மத்தித்ததோடு, மசூதியிலேயே திருமணத்தை நடத்திக் கொள்ளவும் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து பிந்துவின் மகள் அஞ்சுவிற்கும், சரத் என்ற இளைஞருக்கு திருமணம் நிச்சயமானது.

இதையடுத்து செருவல்லி மசூதி வளாகம் திருமண மண்டபமாக உருமாறியது. தென்னைக் குலைகளுடன் வாழை மரங்கள் நடப்பட்டு பந்தல் போடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இந்து முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி மந்திரங்கள் ஓதி, இருமத மக்களும் வாழ்த்த, தாய் பிந்து கண்கள் கலங்கியபடி, உருகி நிற்க, அஞ்சுவின் கழுத்தில் தாலி கட்டினார் சரத். திருமணத்தை முன்னிட்டு மணப்பெண் அஞ்சுவிற்கு, மசூதி நிர்வாகம் சார்பில் 10 சவரன் நகையும், 2 லட்சம் ரூபாய் ரொக்கமும் பரிசாக அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி திருமணத்தில் பங்கேற்ற சுமார் ஆயிரம் பேருக்கான சைவ உணவையும் மசூதி நிர்வாகமே ஏற்பாடு செய்தது.

மதநல்லிணக்கத்துக்கு சான்றாக நிகழ்ந்த இந்த திருமணம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெற்று வருகிறது. இந்த திருமணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க முயற்சி நடக்கும் நிலையில், அப்படிப்பட்ட தடைகளை உடைக்க இந்த மக்கள் உதாரணமாகியுள்ளனர் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...