???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 72 பேர் உயிரிழப்பு

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   12 , 2019  00:52:40 IST

கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. வயநாடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன. மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது, ரயில் மற்றும் விமானச் சேவையும் முடங்கியுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், உயிரை கையில் பிடித்தபடி, பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள, ஆயிரத்து 640 முகாம்களில், இரண்டு லட்சத்து 62 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 72 பேர், மரணமடைந்த நிலையில், 50-க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு, வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே வயநாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை, ராகுல் காந்தி, நேரில் பார்வையிட்டார். கோழிக்கோடு சென்றடைந்த அவரை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர். இதனை அடுத்து நிவாரண முகாம்களுக்கு நேரில் சென்ற அவர், மக்களின் துயரங்களை கேட்டறிந்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...