அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்டோபர் 1-முதல் குற்றாலம், ஒகேனக்கல் அருவிகள் திறப்பு! 0 வங்கக் கடலில் உருவான ‘குலாப்’ புயல்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! 0 உலகத்திற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது - பிரதமர் மோடி 0 கேரளாவில் இன்று 120 பேர் கொரோனாவால் உயிரிழப்பு! 0 இந்து பெண்ணான எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு மம்தா கேள்வி 0 காங்கிரஸ் கட்சியில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார்! 0 வெளியானது சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் டிரெய்லர்! 0 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவு! 0 ராஜஸ்தானுக்கு எதிராக திணறும் டெல்லி அணி! 0 எஸ்.பி.பி.-க்கு மணிமண்டபம் கட்ட அரசு உதவ வேண்டும் - பாடகர் சரண் 0 ஆணவக் கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு - தொல்.திருமாவளவன் 0 கூழாங்கல்லில் கருவி: கண்டுபிடித்திருக்கும் நியூசிலாந்து கிளி! 0 சாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு தேஜஸ்வி யாதவ் கடிதம்! 0 இன்று மாலை வெளியாகிறது டாக்டர் திரைப்படத்தின் டிரெய்லர் 0 சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் பாராட்டு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

கேரள சிறுவர்களின் அயன் வீடியோ: மனம் நெகிழ்ந்து போன சூர்யா!

Posted : திங்கட்கிழமை,   ஜுலை   26 , 2021  20:00:53 IST

இணையத்தில் வைரலான 'அயன்' வீடியோவை உருவாக்கிய திருவனந்தபுரம் சிறுவர்களை வெகுவாகப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

'அயன்' படத்தின் காட்சிகள், பாடலை தத்ரூபமாக மீண்டும் காட்சிப்படுத்திய வீடியோ சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவைப் பாராட்டி சூர்யா தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சிறுவர்களுக்கு ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார் சூர்யா. அந்த ஆடியோ பதிவில் சூர்யா கூறியிருப்பதாவது: "திருவனந்தபுரம் ராஜாஜி நகரில் இருக்கும் அனைத்து இளைய சகோதரர்களுக்கும் இந்த செய்தி. வணக்கம் நான் சூர்யா பேசுகிறேன். என்னே ஒரு அற்புதமான பணியை நீங்கள் அனைவரும் செய்திருக்கிறீர்கள். முழுவதும் ரசித்தேன். 'அயன்' படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதை இவ்வளவு உயிர்ப்புடன் மீண்டும் உருவாக்கியதற்கு முதலில் பெரிய நன்றி. 'அயன்' குழுவிலிருந்து அனைவருமே இதைப் பார்த்து ரசித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

இந்தக் காணொலியைக் கண்டிருந்தால் கே.வி.ஆனந்த் அவர்களும் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பார். எந்தவிதமான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். உங்களின் பேரார்வம் இருந்தால், பேரன்பு இருந்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியும், எதுவும் நம்மைத் தடுக்காது என்கிற செய்தியை நீங்கள் பலருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.

உங்கள் வாழ்க்கையில் எதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த சாக்கும் சொல்ல வேண்டாம் என்கிற கருத்தையும் நீங்கள் சொல்வதைப் பார்க்க முடிகிறது. முழு காணொலியில் உங்கள் உற்சாகத்தைப் பார்த்து ரசித்தேன். மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடுவது நன்றாக இருந்தது.

உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். இதன் பின்னால் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. உங்கள் குடும்பம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் கண்டிப்பாகச் சிறந்து விளங்குவீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...