???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின் 0 விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய சீமான் மீது வழக்கு 0 கேரள மக்களுக்கு ரஜினி, கமல், விஜய்சேதுபதி நிதிஉதவி 0 கேரளாவிற்கு மேலும் 5 கோடி நிதி: தமிழக அரசு அறிவிப்பு 0 கேரள வெள்ளம்:: மனிதன் என்பது எத்தனை மகத்தான சொல்! 0 கேரளமக்களுக்கு உதவுவது எப்படி? 0 கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பிரதமர் ஆய்வு 0 வாஜ்பாய் மறைவு: மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு 0 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி 0 முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் காலமானார்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கவர்னர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3-வது நாளாக தர்ணா!

Posted : புதன்கிழமை,   ஜுன்   13 , 2018  01:00:14 IST

டெல்லி மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த துணை நிலை ஆளுனர் ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி கவர்னர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 
 
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது டெல்லி அரசின் தலைமை செயலாளர் அனு பிரகாஷ், ஆம் ஆத்மி எம்.எல். ஏ.க்களால் தாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 
அமைச்சர்களை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணிக்கின்றனர்.
 
இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை நேற்று முன்தினம் மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.
 
பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதலமைச்சர் மனிஷ் சிகோடியா, அமைச்சர்கள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...