???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட்

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   10 , 2018  22:49:01 IST

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய உற்சவர் சோமாஸ்கந்தர் சிலையை மாற்றி, புதிதாக உற்சவர் சிலை செய்ய இந்து அறநிலையத்துறை திட்டமிட்டது. அதன்படி, இந்து அறநிலையத்துறை ஆணையர் உத்தரவின்பேரில், சிற்ப சாஸ்திரத்தின்படி சோமாஸ்கந்தர் சிலை 50 கிலோ எடையிலும், சிவகாமி சிலை 65 கிலோ எடையிலும் செய்ய முடிவெடுக்கப்பட்டது.
 
இதற்காக பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட தங்கத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிலைகடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் சிலை செய்ததில் 5.75 கிலோ அளவுக்கு தங்கம் பயன்படுத்தாமல் முறைகேடு நடைபெற்று இருப்பது தெரியவந்தது.
 
இந்த முறைகேட்டில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதாவுக்கு தொடர்பு உள்ளது என்று போலீசார் கவிதாவை ஜூலை 31-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்ற கவிதா இரண்டு வாரங்களுக்கு முன்பு விடுதலையானார். கவிதா மீது என்ன நடவடிக்கை எடுக்கபட்டது என சென்னை உயர்நீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பியிருந்தது.
 
இந்த நிலையில், கவிதாவை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் செயலாளர் வெங்கடேஷ் ஆணை பிறப்பித்துள்ளார். பணியிடை நீக்கம் செய்து, நேர்மையான அதிகாரி கவிதாவை பழிவாங்கி உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...