???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காவல்துறையில் விஷாகா குழு: ஐ.ஜி. மீது பெண் எஸ்.பி அளித்த புகார் குறித்து விசாரணை 0 ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்பட்டது உண்மை: மாசு கட்டுப்பாட்டு வாரியம் 0 கேரளாவுக்கு உதவ உலக நாடுகள் முன் வர வேண்டும்: போப் ஃபிரான்சிஸ் 0 வைகை அணையிலிருந்து நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! 0 பேரறிவாளனின் தகவல்களை உள்துறை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவு 0 கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் அஞ்சலி! 0 கேரளாவில் இயல்பை விட 42% மழைப்பொழிவு அதிகம்! 0 கேரளா வெள்ள நிவாரணம்: ரூ.34 கோடி அளிக்கிறது கத்தார்! 0 ரூ. 292 கோடி செலவில் 62 தடுப்பணைகள் கட்டப்படும்: தமிழக முதல்வர் 0 அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு 0 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை மையம் 0 கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி: பிரதமர் அறிவிப்பு 0 கேரளா செல்லும் 11 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு 0 கேரளாவுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை! 0 கேரளாவுக்கு தாராளமாக உதவ தமிழக அரசு முன் வரவேண்டும்: ஸ்டாலின்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

கத்துவா சிறுமிக்காக ஆஜராக உள்ள வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஏப்ரல்   15 , 2018  23:59:32 IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர். 
 
இதற்கிடையே, அந்த பேரணியில் கலந்துகொண்ட பா.ஜ.க. மந்திரிகள் சந்திரபிரகாஷ் கங்கா, லால் சிங் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூபா முப்தி தெரிவித்தார். 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட சிறுமி தரப்பில் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜாவாட் என்பவர் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் தான் ஆஜராவதைப் பலர் விரும்பவில்லை என்றும் ஜம்மு -காஷ்மீர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பூபிந்தர்சிங் சலாதியா நான் ஆஜராவதைத் தடுக்க முயன்று வருகிறார் என்றும் குற்றம்சாட்டினார். 
 
செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தீபிகா சிங்,  “இந்த வழக்கை விசாரிக்கும் நான் தனிமைப்படுத்தப் படுகிறேன். நான் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம். கொலையும் செய்யப்படலாம். நான் ஆபத்தில் இருப்பது பற்றி உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போகிறேன். நீதி கிடைக்கும் வரை போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...